எவர்

எவர்

நீ எனக்கு
நான் உனக்கென
நினைத்தோமெனில்
இடையில் நம்மை
இழுத்தெறிந்து
பிரிக்க முயல்வது
எவர்!

நான் உன்னில்
நீ என்னில்
இறுகிப் போன பின்பும்
ஆவேசமாய் எமக்கு
ஆக்கினைகள் செய்து
தூக்கி எம்மைத்
தூர வீசியெறிய
முயல்வ தெவர்!

ஒன்றை நினைந்து
ஒன்றாய் கிடந்து
ஒன்றிய பின்பும்
நீடிக்க விடோமென
நீட்டி முழக்கி
நீண்டுழக்கி யெமை
துண்டு துண்டாக்க
முயல்வ தெவர்!

நிஜமுகம் மறைத்து
விதவித முகமூடிகள்
அணிந்து
பலவித நியாயம்
கற்பிக்கும்
வழிவழி வந்த
சுயம் இழந்த
அடிவருடிகளோ?


1994

அப்படியே இரு கவிதைத் தொகுப்பிலிருந்து

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது