தெரிவுகள் வருமென!

வானம் இரவில் கொட்டித் தீர்க்கின்றது
வளம் சுரக்கும் பூமி மகிழ்கின்றது
வள்ளண்மை கொண்டோர் பூரிக்கின்றனர்
கொள்கின்றேன் நானும் நல்மனதினோடு
தெள்ளத் தெளிவாய் தெரிய வானம்
ஒளிவெள்ளம் வெளியெங்கும் நிறைகின்றது
குளிர்கின்றது என்பாதம் நடைபயில்கையில்
தெளிகிறது மனம் தெரிவுகள் வருமெனும் மகிழ்வினில்!



சென்ற வருடத்தில் இந்த நாளில் முகநூலில்
இன்றோ கோடை வெயிலின் கதகதப்பில்
நன்றே பெயுமா சித்திரைச் சிறுமாரி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது