இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்றோ ஒருநாள்

சீரிய சிந்தையில் கூரிய கவிவடித்தே பாரிய அதிர்வை என்னுள் எழுப்பி வீரியம் செய்தீர் இன்றோ சரீரம் விட்டே சரித்திரம் ஆனீர் விரிந்த உலகிடை பரந்த மானிடர் மனதினில் பாவினால் வாழ்ந்திடுவீர் மூத்தகவியே முதல்வனே நீர் யாத்தகவியால் என்னுள் பூத்தபுதுப்பூவாய் நித்தம் நிலைத்து நிற்பீர் சாத்துவேன் பாப்பூமாலை ஏத்துவேன் புகழ்மாலை பொதுமை நெறியில் புதுமை வழியில் ஒருமை கண்டீர் அருமைத் தமிழிற்கு பெருமை சேர்த்தீர் உருவில் சிறியராய் அறிவில் பெரியராய் அகிலத்தை நிறைத்தீர் கடூழியம் செய்தே அடிமை நிலைவாழ்வார் மிடிமை போக்கும் விடிவினை வேண்டியே இலக்குக் கொண்டு இலக்கியம் படைத்தீர் இலக்கியம் ஆனீர் ஆளை ஆள் மேவுமுலகில் ஆளுமையால் நிறைந்தீர் பழையது கழிய புதியது வரும் நியதியை அறிந்தே மீட்சியை நோக்கி ஆக்கினீர் பாதை ஊக்கியாய் ஆனீர் யாத்தஉம் கவியால்! பாக்கியமே நாம் பாவழி பெற்றமே! இல்லை என்பதை இல்லை செய்குவோம் எனும் உன்கவி வல்லமை கண்டோம் இன்று கவிமுருகையன் இல்லை என்பதை இல்லை ஆக்கோமோ சொல்லால் கவிபற்பல நல்லாய் ஆக்கமுற எல்லார்க்கும் ஈந்தே எல்லாம் சரிவருமெனச் சொ

மாண்டவர் யாரோ?

ஆண்ட பரம்பரை ஆள நினைத்து வீழ்ந்த போதும் வீழ்ந்த போது மாண்டவர் யார் வரலாற்றின் பக்கங்களைத் தோண்டத்தோண்ட ஆண்டர் அடிமையாய் காலம் காலமாய் ஆகியவரின் வழிவழி வந்த பரம்பரையோர் மூண்ட போரில் ஆண்ட பரம்பரையோர் கண்ட கனவினிற்காய் மாண்டனரேல் ஆண்ட பரம்பரையினர் ஆள நினைப்பது ஆரையென மாண்டவர் உற்றவர் அறிவரோ உழைப்பே உயர்வென வாழ்ந்த மனிதர் இழைத்த கொடுமையென எதைச் சொல்ல... நாமுரைக்கும் மொழி நமக்குள கூட்டின் இணைப்பிற்கும் இன்புற விளைந்த உறவிற்கும் என்பதன்றி வேறொன்றறியார் தேறியறிற்கா அனைவர்க்கும் கல்வி ஆண்டபரம்பரையோருக்கு சரணம் எனச் சொல்லவே அகர முதல எழுத்தெல்லாம்... தத்தம் மொழிபேசிக் கூடி இயல்பாய் இன்புற வாழ்ந்த இனமென உணரா மாந்தர் காண்டற் கரியகருவியொடு மாண்டனரேல் மாண்டதன் காரணம் அறிவரோ ஆண்ட பரம்பரை ஆள நினைத்தது அவரையே என உணர்வரோ? அழ பகீரதன்