இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலர் பாடல்

காதலர் பாடல் ஈழத்து தேவன் பூதனார் காசு காசு காசு காசு காசு காசு காசு வருமுன்னே நான் மனிசனானேன் காசு வந்த பின்னேநான் மிருகமானேன் காசு வருமுன்னே நான் காதலிச்சேன் காசு வந்த பின்பேநான் பேதலிச்சேன் காசு வருமுன்னே நான் சிரிச்சுப் பேசினேன் காசு வந்த பின்பே நான் இறுக்கிப் பேசுகிறேன் காசுவருமுன்னே நான் ஒத்துழைச்சேன் காசு வந்த பின்பே நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று எதுக்குச் சொல்கிறேன் பதுங்கிப் பாயும் மிருகமாகி மாறிப் போனேனே! நன்றி - 'தாயகம்' ஏப்பிரல் ஜூன் 2014

ஆண்டினை வரவேற்போம்

இரண்டாயிரத்து பதினைந்து இதமாய் இருந்திடும் இதயம் உள யார்க்கும் இனியொரு துயர் வரினும் இன்பம் தொடரும் எனும் நம்பிக்கையில் இடர்ப்படா தேற்போம் எனும் இயலுமையுடன் வரவேற்போம் யார்க்கும் பொதுவாய் ஆயிற்று யாதொரு ஐயம் இன்றி ஆண்டினை அறிகுவோம் யாவருடனும் ஐக்கியப்பட மதம் தடையிலை என்போம் யாவருடனும் கலந்திட மொழி இடையூறு இலை என்போம் யாவருடனும் ஒன்றுபட சாதி ஒரு சாட்டிலை என்போம் யாவரும் தொழிலாள வர்க்கம் எனில் ஒன்றுபடுவோம் யாவரும் இணைந்தே முதலாளியம் எதிர் நின்று உடன்படுவோம் யாவரும் இணைந்து தடைகளைத் தகர்ப்போம்

ஆச்சு

படம்
பண்பாடு போயாச்சு பகுத்துண்டு வாழ்வதும் பேச்சாச்சு கண்டு பழகும் பழக்கம் பாழாச்சு விரலால் நோண்டித் தேடி ஒளிர் திரையில் முகம் பார்த்துக் கதைக்கும் காலமாச்சு வயசோ ஐம்பதாச்சு வருடங்கள் போயாச்சு பெத்த பிள்ளைகளோ நாம் பட்ட துன்பம் துயரம் அறியா நிலையாச்சு போர்ச் சுவடற்ற அபிவிருத்தியில் நகராச்சு வீட்டுத் திட்டத்தில் படை வீரர் நட்பாச்சு ஊர்ப் பேச்சுப் பேசி நாளாச்சு கூடிப் பேசிடத் தடையாய் தொலைக்காட்சி ஆச்சு கூடிடில் தொடர்நாடகம் பேச்சாச்சு கற்பு விலையாச்சு விபச்சாரம் செய்வதுவே விமோசனம் என நிற்கச் சுற்றுலா வழியாச்சு மதுசாரம் சிறப்பாச்சு கஞ்சா அரங்கேறியாச்சு காசு ஆற்றல் கதையாச்சு பதவிகள் வந்தாச்சு பட்டங்கள் பெற வழிகள்  பலவாச்சு விருதுகள் பெற விழாக்கள் பெருகலாச்சு மண்டபங்கள் மிளிரலாச்சு மனங்கள் விரிசலாச்சு தண்டவாளங்கள் தொடரலாச்சு விலைவாசி விண் தொடலாச்சு தொடர் மாடிகளில் பொருட்கள் குவியலாச்சு கடன்கள் பெருகலாச்சு நிலத்தடி நீரில் ஓயில் கலந்தாச்சு போத்தில் நீர் பொக்கிசமாச்சு வரட்சி நிவாரணம் வந்தாச்சு வெள்ளம் பெருக்கெடுக்க மண் சரிவில்