திங்கள், 6 ஜூன், 2016

விளக்கம் புரிந்திடில்!

எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
என்னில் நீயும்
உன்னில் நானும்
என்னால் நீயும்
உன்னால் நானும்
என்னொடு நீயும்
உன்னொடு நானும்
கலப்பது நிசமெனில்
விலக்கென ஏனெமக்குள்
சாதியம் இனத்துவம் மதம்...
இல்லாப்  பிரிவினைகள்
எதற்கெமக்குள்?
விதைத்தெது எவரோ!
விளக்கம் புரிந்திடில்
விலக்குவோம் பிரிவினைகள்..
கலந்திடப் புரிதல்கள்!

வெள்ளி, 3 ஜூன், 2016

இயலும், எண்ணுவமோ?

பெண்ணின விடுதலையைப் பெற்றுத் தரவென்றோ
கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர்
பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை
கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று
கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில்
விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும்
பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்!

எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும்,  எண்ணுவமோ?

புதன், 1 ஜூன், 2016

பகுத்து அறிந்திடில்...

தெளிவு பெறுவோம் தேறுவோம் ஒளிபெறுவோம்
ஒளிவு மறைவின்றி இயல்பாய் பேசிடுவோம்
பண்பு பெறுவோம் பாலிய மங்கையரை பேணிடவே!
பற்றுக் கொள்வோம் நல்நெறி நலம் காப்பதிலே!
மோகம் காமம் ஒப்பிய திரை மறை நிலை ஒழிய
பள்ளி மாணவர் பண்பு நிலை காத்திடவே
பகுத்து அறிந்திடில் பாலியல் கல்வி வேண்டுமென்பேன்
வகுத்துக் கொடுப்பதற்கு இன்னுமேன் தயக்கம்?