இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்டைகளின் அடிமைகளாய்

இய பேசிக்குள் இயலுமாகின்ற இளமைகள் கரையும் நாட்கள் தயவை நாடும் மனங்களைத் தவிர்த்திட வலை விரிப்பு சேய்மையில் கண்டவர் யாரும் நட்பெனக் கொள்ளாக் காலம் உட்பொதிந்து இயபேசிக்குள் பொத்தானுக்குள் சினேகம் நாடத் தூயவை என எதுவுமிலையென காய்கின்ற மனதொடு இருப்பு சூழ்ச்சிக்குள்  மாய்ந்த நிலையெனில் வேவுபார்த்திட நம்மை நாமே காட்டிக் கொடுத்திட கற்றோம் எனில் மதிக்கின்ற வகையினில் யார்க்கும் பொறுப்பில்லா நிலையிலென்ன விதைப்பு சேதிகள் பெறுக்கிட நாட்கள் சேதிகளாய் விரிந்திட கூடுமெனில் சேதிகளாய் ஆவதில் தான் தவிப்பு சேதியே சேதியை தேடிடத் தேவைகள் சேதியை நோக்கியே யாரிடம் யாருக்காய் யாரொடு யாராகி யாரொடு யார் மோதி யாருக்காய் தேசமென யாருக்கும் ஓர் தேசமென தேசமே விமோசனமென தேசத்தை தேசம் மேவ தேசியம் தேடி குறுந்தேசியம் பேசி தேசங்கள் கடந்த தேசியம் காண ஓர் நாடு இரு தேசமென ஓர் மதத்திற்கே தேசமென மதமே ஆழுமென ஒடுக்கப்பட்ட சாதிகளின் தேசியமென விடுக்கப்படுகின்ற தாள்களில் எங்கும் பாசம் நாசம் பண்பு நாசம் உறவு நாசம் உயிர்மை நாசம் வேசம் கூடும் பொய்மை மேவும் கோச

ஒப்புவதோ!

படம்
நிலங்கள் மெழுகப்படுகின்றன தலங்கள் செழுமைப்படுகின்றன வீதிகள் விசாலிக்கப்படுகின்றன விரைவுந்திகள் வலம்வருகின்றன மண்டபங்கள் சிலிர்க்கின்றன வாகனங்கள் செல்கின்றன தொடருந்திகள் வருகின்றன உடைகள் கவர்கின்றன ஹோட்டல் உண்டிகள் உருசிக்கின்றன பதவிகள் கிடைக்கின்றன பெருமிதங்கள் தோன்றுகின்றன நாடுகள் வரவேற்கின்றன தொலைபேசிகள் கதறுகின்றன இணையம் எல்லாம் தருகின்றன அட்டைகள் எங்கள் வசம் தட்டினால் போதுமாம் தடையின்றி வருமாம் எல்லாமும் எனிலும் மனங்கள் விரிவதில்லை அகம் மலர்வதில்லை ஏழ்மையில் மாற்றமில்லை நித்திய வாழ்வில் சித்தமதில் சிறப்பில்லை உழைப்போ கிடைப்பதில்லை உணவுக்குள்ளோ நஞ்சு அடகு வைக்கப்பட்டது எங்களது இருப்பு! உலகமயமாதலாய் விரிந்த முதலாளியம் செழிக்கவோ வந்தன வந்தன எல்லாம் எனில் தோழமை தொலைத்த தாழ்வதை ஒப்புவதோ நாம்! நன்றி : தாயகம் 86 அழ பகீரதன்

விடுதல் இல்லா விருப்பு

நாளைய உலகு உனக்கென விரியும் பொறுத்திடும் தருணங்களில் மனது மலரும் நடப்பும் நிகழ்வும் உமக்கென தெரியும் முதிர்வில் உனக்கென நிலமும் நெகிழும் உலகுள இயற்கை உமக்கென உளதாகும் உலகினுள் வேற்றுமை தெற்றன தெரிவதாகும் உலகிது  எல்லோர் பொதுமையென கிடந்திடும் விலக்கிடில் எப்படி மனமது நிறைந்திடும் விரியும் விரியும் உறவுகள் விரியும் அறிவோர் தெரிவர் அகமது மலரும் அரிதில் கிடைப்பது அன்பெனத் தெரியும் செறிவது இணைப்பே நாடொறும் நிலைக்கும் சுடரும் சுடரும் ஒளிர்வென சுடரும் சுருதி அடங்கிடாது நாடொறும் விளங்கும் சுதந்திர உலகில் இன்பமே நிறையும் இதந்தரும் இணைப்பே இயலுவ தாகிடும் நாளை உலகினில் மாற்றம் நிகழ்ந்திடும் நாட்டுவர் பொதுமை நாநிலம் செழித்திடும் கொடுமை இல்லாக் குவலயம் நிறைந்திடும் விடுதல் இல்லா விருப்பினில் செறிவோம்

தனிமைக்குள்...

ஆருக்காகப் பிறந்தேன் ஆரோடு உறவானேன் ஆரெவரையோ மணமுடித்தேன் ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன் போர் துன்பம் தாங்கா பிள்ளைகள் புலம்பெயர்ந்திடப் பேருரைக்க பேரன்மார் உலகெங்கும் உள்ளனரேல் பேந்துமேன் எமக்கு வாழ்வு என எண்ணியோ எண்ணாமலோ உறவான கணவன் இடைவயதினில் குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து விடைகொடுப்பு முதுமையின் தனிமையில் நாட்களை ஓட்டுவதே வினையாக வாழ்வானேன் ஒருவருக்காய் உலைவைப்பு ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே முதுமையின் தனிமையில் வாழ்வு செல்பேசியில் சுகம் விசாரிக்கும் விசாலமான உறவுகள்… தனிமைக்குள் இருட்டுக்குள் இருப்பதுவே எனக்கு இயலுவதாகிடச் சுருங்கிய உலகினுள் சுகவிசாரிப்பற்ற ஒடுங்கிய ஊருள் பாரம்பரிய வீட்டுக்குள் பார்த்திடத் தொலைக்காட்சி பேசிட செல்பேசி பார்த்துப் பேசிடப் பழகிட கைகொடுத்திட வருடிட கொஞ்சி அன்பால் அரவணைக்க துணையோ பிள்ளையோ குஞ்சுகளோ அற்ற தனிமைக்குள் முதிர் விதவையாய் நான்…! அழ பகீரதன் நன்றி : தாயகம் 85

சேர்ந்திடும்

அனுதினமும் துயரெனில் அதிகாலை அமைதியில் அரிதினில் தெரிவாய் அன்பினில் ஏற்றம்! சிறுசிறு துன்பம் தேற்றிடும் மனம் பெறுகின்ற பேறிற்காய் பொறுத்திடும் கணங்கள்! குழந்தைகள் குறும்புகள் வளர்ச்சியின் துடிப்பு மழலைகள் மலர்வு மனதினில் நிறைவு! விடலைகள் சேட்டைகள் விடுஅது இயல்பு அடங்கிட மறுக்கின் அனுபவம் வாய்க்கும்! பிரச்சனை என்பதுவே நாட்களின் தோற்றம் கரச்சல் என்பதுவே காலத்தின் தோற்றம்! மாறுடும் தோறும் ஆறிடும் மனம் தேறுவது ஒன்றே கேடில்லை முயலில்! முரண்படில் இயக்கம் முகிழ்த்திடும் ஏற்றம் செறிவது கூடும் சேர்ந்திடும நலங்கள்! அழ.பகீரதன்