இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் கல்வியில்...

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இன்றைய தினம் எனது ஊரில் உள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக வரச்சொல்லி சென்றேன். மாணவர்களுக்கான மன்றம் உருவாக்கும் நோக்குடன் அந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது. அங்கு பல வயதினரான மாணவர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கற்பதற்கான சூழல் இருப்பதில்லை என குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. உண்மைதான் அயல் வீடுகளில் வானொலிச் சத்தம் அயல் கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் வீடுகளிற்கிடையில் இடம்பெறும் மோதலும் சண்டையும் குடிவெறியும் கும்மாளமும் மாணவர் கல்வியில் ஊக்கத்தை கெடுப்பனவாகவே இருக்கின்றன. பலவீடுகளில் தொலைக்காட்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கி தடையாக இருக்கின்றன. மாணவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார்கள். இவற்றை திருத்தி மக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவார்களா! இந்த மாணவர் மன்றம் ஆக்கமுடன் செயற்பட்டு இக்குறைபாடுகளை களைந்து மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வழி ஏற்படுத்துகின்றதா என பொறுத்திருந்

கனவுகளைக் கலைத்துவிடாதே

படம்
முத்தங்கள் பரிமாறிய முதலிரவின் கனவுகளை கலைத்து விடாதே! சித்தத்தை உன்மேல் வைத்தே தொலைதூர உழைப்பில் காலம் கழிக்கின்றேன். உனது கனவுகளைச் சிதைத்து விடாதே! முதல் குழந்தையின் முகத்தைக் கூடக் காணாது உங் கென்ன வேலையென்று கேட்கிறாய், அந்தக் குழந்தைக்காய் தான் உழைக்கிறேன். கனவுகளைச் சிதைத்து விடாதே! மனைவி எனது மனதைப் புரியாது பிற நாட்டு மயக்கில் வாழ்கிறாயே என வினவுகிறாய் நீ பூச்சூடி பொட்டிட்டு வகை வகையாய் கலர் கலராய் உடை யுடுத்தி நகை யணிந்து நீ இனிக்க நான் கண்டு மகிழ உழைக்கின்றேன் கனவுகளைக் கலைத்து விடாதே! அன்றொரு நாள் அந்தி மாலை வேளையில்  இச்சை மிக உனை அணைக்கையில் சொன்னாயே சொந்தமாய் வீடிருந்தால் எப்போதும் சுகந்தான் என்று! அதன் பொருட்டே உழைக்கிறேன் கனவுகளை சிதைத்து விடாதே! இப்போதைக்கு மட்டும் நனவில் அன்றிக் கனவில் மட்டும் கூடும் காதல் பறவையே முதலிரவின் கனவுகளைக்  கலைத்து விடாதே! -எனது அப்படியே இரு கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

சித்திரையில் மலர்வோம்

படம்
எத்திங்கள் வரினும் இத்திங்கள் போலாகுமா சித்திரையில் எங்கள் சித்தம் மகிழும் அறிவீரோ? புத்துலகு பூத்தாப்போல் இத்தரை மகிழும் வித்தகமும் விஞ்ஞானமும் வளர்ந்து சித்திக்கின்றது  மண்ணில் புத்திமிக நாமும் மலர்ந்து பூத்திடுவோம் இத்தினத்தில்