இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெரிவீரே!

நேற்றைய வாழ்வின் நேயங்கள் அறிவீரோ சொந்தமும் பந்தமும் கூடலும் தெரிவீரோ பார்த்தவர் வியந்திட பழகியதும் உணர்வீரோ ஆர்ப்பரிக்க மனம் இலயித்ததும் செறிவதுவோ பூப்பதும் உளம் பூரிப்பதும் இயல்பதுவோ காப்பதும் கருத்தில் கொள்வதும் பண்பலவோ சொக்க வைப்பதுவும் அற்பம் இலவல்லவோ ஆக்கம் நிகழ்வதும் ஆனந்தம் அல்லவோ அணைப்பதுவும் தொடர்வதுவும் இணைப்பல்லவோ கொடுப்பதுவும் பெறுவதும் இருப்பினில் இயலுவதே நாடுவதுவும் நன்மைகள் நாட்டுவதுவும் குறைவதுவோ தேடுவது பேரின்பமெனில் தனிமை தவிர்ப்பதல்லவோ பீறுபெற வாழ்வதற்கு தேறுதல் கூடுவதல்லவோ நேற்றைய வாழ்வின்  நேயங்கள்  அறிவீரே சொந்தமும் பந்தமும் கூடலும் தெரிவீரே ! அழ பகீரதன்

புழுங்கிப் போவதுவோ?

படம்
திருமணம் வாழ்வின் தொடக்கம் இருமனம் இயற்றுடும் தவமாம் நற்பேறு பெற்றிடவெனவே நல்வரனாய் வரவேண்டும் என பல்லோர் வாழ்த்த வாழவென காத்திருந்து காத்திருந்து வந்த வரன் சேத்திருந்த பொருளெலாம்   கொட்டி பாத்திருந்து பல்லோர் வியக்க மணமேடை அலங்கரிப்பில் மலந்திருக்க மாண்புடையோர் வந்து வாழ்த்திட சேர்ந்தனர் சோடிப் பொருத்தம் வியந்திட ! கூடினர் முயங்கினர் ஊடினர் தேடினர் பாடினர் பரவினர் நாடினர் நாட்டினர் வாழ்வின் அர்த்தங்கள் பற்பல கண்டனர் ஆழ்தலின் உணர்வின்றிஅன்பினில் கலந்தனர் சூழ்ந்தவர் பார்த்தவர் வியந்திட வாழ்ந்தனர் பேறாய் பெற்றனர் மகவினை மகிழ்வினில் ஊறாய் வந்த ஊற்றென உவந்தனர் சாறாய் கருதியே பற்றொடு அணைத்தனர் மாறா அன்பொடு   மலர்ந்தனர் மகிழ்ந்தனர் உறவின் கலப்பின் உன்னதம் என்றனர் பின்வந்த நாட்கள் பிளவுகள் ஆகின … நாட்கள் நகர்ந்திட நற்றவம் முடிந்ததோ ஆட்கள் பாத்திருக்க சூட்சிகள் நிகழ்ந்ததோ கேள்விகள் பெருகப் பதில்கள் ஒழிந்ததோ கொள்கைகள் மாள குடும்பம் குலைந்ததோ செவிகள் செவிடாக கண்கள் குருடானதோ பாவிகள் ஆவிகள் பெருகிட அதிர்விதுவோ உயிரும் மெய்யும் வேறு

நிற்க அதற்கு தக!

படம்
  தரணியெங்கும் தமிழரென பொங்கி மகிழ்ந்து   முகநூல் பரப்பி வாழ்த்துக்கள் பல பெற்று நான் இங்கும் வந்து உழவர் விழவில் மகிழ்ந்துள்ள தலைமைக் கவிஞர் கவிப்பொங்கல் படைக்கவந்த கவிஞர் கவிச்சுவை பருக வந்த சுவைஞர் அனைவர்க்கும் என் அகம் மகிழ்ந்து வணங்கி நின்று வியக்கின்றேன் நானும் ஒரு கவிஞன் என்று வெறுமனே இரசித்துவிட்டுப் போகின்ற என்னையும் அழைத்திருக்கின்றனர் தேசிய கலை இலக்கிப் பேரவையினர் தோழமையோடு கூடி நாற்சார் வீட்டுக்குள் சாற்றுக கவியென்று ! எப்படிச் சாற்றுகவெனில் நிற்க அதற்குத் தகவாம் ! சொற்சுவை பொருட் சுவை கூட்டி நற்றமிழ் கொண்டு பாட நானென்ன வரகவியா ? இப்படித்தான் இருபத்திரண்டு வயதினில் இயலுமானால் ஒரு கவிசாற்று என்று சென்னை மாநிலக்கல்லூரியில் நண்பர் செப்பினர் கற்பெனப்படுவது என பிரத்தியேக தலைப்புக்கொடுத்து சொற்சுவை கூட்டி நானும் கூடிய நண்பரிடை பூங்காக் கவியரங்கென சந்தானம் பெயரிட முற்றத்தில் எழுந்து நிற்கின்றேன் கவிபாட சிற்றிதழில் கிறுக்கிய என் வரிகளுடன் அடியெடுத்து அரங்கில் வீச முயன்றிடிலோ நடுங்கின கால்கள் ! சொற்கள் திக்கின !1 வ