இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுமைக் கவிஞன்கவிகளிலே

கடவுளை காக்கைச் சிறகிலே கண்டான் கடமை முடிக்க சக்திக்கு விண்ணப்பித்தான் மடமை அகற்ற வென்று மனதில் திடங் கொண்டவன் தீட்டினான் கவிதைகள்! தமிழின் இனிமையை நானில மறிந்திட அமிழ்த மெனப் போற்றி அவன் தமிழின் செழுமையை யாவரும் உணரத் தாமிசைந்த படி புனைந்தான்  பலகவி வந்தே மாதரம் என்ற தாரக மந்திரத்தை வெள்ளையர் ஆட்சியில் மக்கட்கு தந்திரமாய் எடுத்துக் கூறி வீரச் சுதந்திரம் பெற பாடினான் பலகவி: பஞ்சமோ பஞ்ச மென்று நிதம் பஞ்சக் கவிபாடும் பல மக்களது துஞ்சத் துயர் போக்கு சிலரை வஞ்சித்து பல பாட்டும் புனைந்தான் சாதி இரண்டே வேறில்லை என பேதி யிலாததை யகற்ற அவன் சேதிகள் பல சொல்லி மக்களுக்கு போதித்து புனைந்தான் பல கவிகள் பாதிமனித பாவ வாழ்வு அகல பாடல் பல பாடினான் பாரதி அவன் கவிதை என்றும் வாழ்க! அவன் புகழ் எங்கும் ஓங்குக!                                                                     பேரம்.விஐயநாதன்

விரித்த பாடப்புத்தகம்

முன்னாளில் தலைமை வாத்தி கையில் பிரம்பொடு கண்ணில் கடுமையொடு நடைபோட்ட தன்மை கண்ணுக்குள் நிற்கிறது. இன்றோ துணைக்கோ எவருமின்ற இருக்க ஓர் வீடின்றி உறவினர் படலைகள் திறக்கின்ற பாங்கு! என்னே நிலைமை! பிள்ளைகள் ஆறு மூத்தது பெண் சொந்த வீட்டுச் சொகுசொடு மாநகரில் குடியிருப்பு இவர்வழிப் பேரரோ இலண்டன் கனடா எனப்பல நாடு! இரண்டாவது மகளோ கட்டிக் கொடுத்த பெண் இந்தியாவிலே என்பதால் அங்கேயே இருப்பு. மூன்றாவது! கொஞ்சம் வசதிக் குறைவு கொடுத்த சீதனவீடு வளவு வித்துச் சுட்டு யாழ் நகரில் வாடகை வீட்டில் குடித்தனம்! ஆம்பிளைகள் மூன்று மூத்தவர் பிள்ளை குட்டிகளொடு லண்டன் மாநகரில் பெருவாழ்வு! அடுத்தவர் டொக்குத்தர் அருமை மனைவி பிள்ளைகளொடு அமெரிக்காவில்- சொந்த வீடும் இருக்கும்! இளையவர் ஜேர்மனியில் கொழும்பில் இருக்கும் குடும்பத்தை அழைக்கலாம். எனில் பின் ஏன் வாத்தி நடுத்தெருவில் நிற்றல்! எண்பது வயது மனைவி இருக்கும் வரையில் நல்லாய்த் தான் இருந்தார் அடக்கி ஆண்டு! இன்றோ இளைய மகளுடனும் இருப்புக் கொள்ளாமல் அலைதல் ஏன்? பாசமூட்டிப் பிள்ளைகளை வளர்த்த தில்லையா? வாத்தி என

என்றோ ஒருநாள்

சீரிய சிந்தையில் கூரிய கவிவடித்தே பாரிய அதிர்வை என்னுள் எழுப்பி வீரியம் செய்தீர் இன்றோ சரீரம் விட்டே சரித்திரம் ஆனீர் விரிந்த உலகிடை பரந்த மானிடர் மனதினில் பாவினால் வாழ்ந்திடுவீர் மூத்தகவியே முதல்வனே நீர் யாத்தகவியால் என்னுள் பூத்தபுதுப்பூவாய் நித்தம் நிலைத்து நிற்பீர் சாத்துவேன் பாப்பூமாலை ஏத்துவேன் புகழ்மாலை பொதுமை நெறியில் புதுமை வழியில் ஒருமை கண்டீர் அருமைத் தமிழிற்கு பெருமை சேர்த்தீர் உருவில் சிறியராய் அறிவில் பெரியராய் அகிலத்தை நிறைத்தீர் கடூழியம் செய்தே அடிமை நிலைவாழ்வார் மிடிமை போக்கும் விடிவினை வேண்டியே இலக்குக் கொண்டு இலக்கியம் படைத்தீர் இலக்கியம் ஆனீர் ஆளை ஆள் மேவுமுலகில் ஆளுமையால் நிறைந்தீர் பழையது கழிய புதியது வரும் நியதியை அறிந்தே மீட்சியை நோக்கி ஆக்கினீர் பாதை ஊக்கியாய் ஆனீர் யாத்தஉம் கவியால்! பாக்கியமே நாம் பாவழி பெற்றமே! இல்லை என்பதை இல்லை செய்குவோம் எனும் உன்கவி வல்லமை கண்டோம் இன்று கவிமுருகையன் இல்லை என்பதை இல்லை ஆக்கோமோ சொல்லால் கவிபற்பல நல்லாய் ஆக்கமுற எல்லார்க்கும் ஈந்தே எல்லாம் சரிவருமெனச் சொ

மாண்டவர் யாரோ?

ஆண்ட பரம்பரை ஆள நினைத்து வீழ்ந்த போதும் வீழ்ந்த போது மாண்டவர் யார் வரலாற்றின் பக்கங்களைத் தோண்டத்தோண்ட ஆண்டர் அடிமையாய் காலம் காலமாய் ஆகியவரின் வழிவழி வந்த பரம்பரையோர் மூண்ட போரில் ஆண்ட பரம்பரையோர் கண்ட கனவினிற்காய் மாண்டனரேல் ஆண்ட பரம்பரையினர் ஆள நினைப்பது ஆரையென மாண்டவர் உற்றவர் அறிவரோ உழைப்பே உயர்வென வாழ்ந்த மனிதர் இழைத்த கொடுமையென எதைச் சொல்ல... நாமுரைக்கும் மொழி நமக்குள கூட்டின் இணைப்பிற்கும் இன்புற விளைந்த உறவிற்கும் என்பதன்றி வேறொன்றறியார் தேறியறிற்கா அனைவர்க்கும் கல்வி ஆண்டபரம்பரையோருக்கு சரணம் எனச் சொல்லவே அகர முதல எழுத்தெல்லாம்... தத்தம் மொழிபேசிக் கூடி இயல்பாய் இன்புற வாழ்ந்த இனமென உணரா மாந்தர் காண்டற் கரியகருவியொடு மாண்டனரேல் மாண்டதன் காரணம் அறிவரோ ஆண்ட பரம்பரை ஆள நினைத்தது அவரையே என உணர்வரோ? அழ பகீரதன்

எண்ணாரோ ?

ஏற்றம் மக்கள் வாழ்வில் இல்லா உயர்வில் திளைத்து தெரியப் போர்ச்சுவடே இன்றி ஊர்  தெருக்களில்     நீள உருளுந்தியில் இளையோர் சவாரி அருகருகே மனைகள்  எழுந்தே மினித்திரை அரங்காக ஆகும் விந்தை தொலை கோபுரதரிசன நோக்கின்றி அண்ணாந்து பார்க்க ஆலயம் வெளிநாடு இருந்து வந்தவர் நட்பில் கலக்க சிந்தையில் பேப்பர் கட்டுக்களுடன் நிதிகேட்டு வீட்டில் விடியமுன் கியூ வரிசை வாழ்வின் அர்த்தங்கள் தொலைத்து தொலைதூர உழைப்பின் இன்னலில் அவர்கள் அண்டி வாழ்வார் இங்கோ செல்வச்செழிப்பில் சிலிப்பர் பெண்டிர் இடை வளைத்து ஆடும் ஆட்டம் ஒளிர் இல்லத்து அரங்கில் பிள்ளைகளோடு பார்த்துகளிக்கும் ஏற்றம் இல்லா உயர்வில் வாழ்வார் சொல்லொன்று கேட்கார் தேறார் தெரியார் பொதுமை காணார் எல்லார் நலன் மேம்பட தடுத்து வையகத்து வளம் நமக்கெனவே குவித்து செழிக்கும் வல்லார்.. உலகமயமாதலாய் செழித்து வளர் முதலாளியம் வீழ்த்தி மனிதம் காத்திட முயல எண்ணாரோ  ? அழ பகீரதன்

ஊருக்குப் பொதுவாய்

கூடி வாழ்ந்த காலம் தேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திருந்த காலம் நேற்றுப் போலிருக்கிறது ஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை புரிந்து உறவுடன் மகிழ்ந்த காலம் பணம் இல்லை பல வசதி இல்லை குணம் ஒன்றே எம் சொத்தாய் கூடி வாழ்ந்திருந்தோம் குடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூகலித்தோம் ஒரு நேரச் சோறேனினும் வயிறார சூழ்ந்திருந்துண்டோம் எம் உறவுகள் பற்றி எம் பிரச்சனை பற்றி எம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி எம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந்தோம் இன்றோ தேச விடுதலை யுத்தம் ஓய்ந்த காலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உய்ந்தார் குடிசைகள் வீடுகள் ஆயின எல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன உள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலியில் நலம் கேட்கும் கோலம் சக்தி வாந்தி எடுக்கும் மேட்டுக்குடிகளின் சின்ன வீட்டு பிரச்சினைகள் எங்கள் வீட்டு சின்னத் திரைக்குள் எங்கள் பேச்சாயின உறவுகள் கூடுதல் இல்லை உரிமைகள் பற்றிப் பேசுதலில்லை உறவுகள் ஏழ்மை நிலையில் அக்கறை ஏதுமின்றி சொத்துச் சேர்க்கும் மும்மரம் ஏழைகள் பாடு அவர் படு ஊருக்குப் பொதுவாய் கோயில் வான் முட்ட எழுந்தால் போதும் ஏற்றம் எமக்கெனும்

தகுமோ ?

அன்பு கொண்டால் உலகில் இன்பம் உண்டு என்று கண்டு சின்ன உள்ளம் உவகை மேலிட தன்னந் தனிய வாழும் தனிமை குலைக்க இன்பம் நிறைந்த அந்திப் போழுது என்னே கொடுமை ! ஊர் கூடிற்று பேர் அறியாப் பேதை ஊர் தெரியா உரவோன் நேர் கண்டார் நவின்றார் நில் என்றார் நட வென்றார் சொல் என்றார் ; எடு பொல் என்றார் எல்லார் நிலை ஒன்றே , நன்று ! கூடி வாழக் குடில் இருந்த காலம் ஒன்றுண்டு நாடி உறவு வர விருந்துண்டு மகிழ்ந்ததுண்டு தேடி வருவார் இன்றி வீடிருக்கும் இன்றோ வீட்டில் கொலுவிருத்திய காட்சிப் பெட்டகத்தில் வேசை ஆடுவாள் ஆடவர் உடலோடு உடல் உரசி! பேதை பெதும்பை மங்கை நங்கை இளம்பெண் பேரிளம் பெண் அன்னை ஆச்சியோடு பார்த்து மகிழ்ந்திடில் இது தகுமெனக் கொளலோ அழ பகீரதன்