இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேளாய், பெண்ணே!

விட்டு விட்டு விழுகின்ற சொட்டு நீருக்காய் குழாயின் கீழ் சொண்டு நீட்டி காத்திருக்கும் குருவி போல் இடைக் கிடை அன்பு காட்டும் குடிகாரக் கணவனுடன் குடித்தனம் பண்ணுகிறாய்! பெத்த அன்னை தந்தை பார்த்து சொத்துக் கொடுத்து தந்த சொந்தம் எட்டி அடித்தால் என்ன செய்வது வாழ்தல் கடன் எங்கும் இப்படித்தான் ஆறுதல் சொல்லுகிறாய்! இராணுவ வதையாய் இரணமாய் உடம்பு ஆயினும் நீயோ  ஆக்கிய அவனே மணாளன் என மகிழ்ச்சி கொள்கிறாய் மூஞ்சை வீங்கிக் கண்ணீர் சிந்தினும் கணவன் அவனே உரிமை உண்டென எண்ணம் கொள்கிறாய்! ஏதென்று சொல்வேன் உன் அறிவீனம்! அடிமையாய் போவதற்கோ திருமண உறவு? இணையாய் வாழ்வதற்கே ஒப்பந்த மணமே! உதவியாய் இருப்பதற்கே உறவென்ற அமைப்பு, உதைப்பதற்கு அன்று! அடிக்கின்ற கையை தடுத்து நிறுத்து! அன்பின் தத்துவத்தை எடுத்துக் கூறு! முடியாது என்றால் முறித்து விடு உறவை! 1988 அப்படியே இரு தொகுப்பில் இடம்பெற்ற கவிதை -அழ.பகீரதன்

மீண்டும் களிப்போம்

காற்று வீசும் கங்குல் போதில்... மேற்கு வானில் பொழுது சாய்ந்த பின் பிறைநிலா வளர்வதும் முழுநிலா தேய்வதும் கண்டு மகிழ்ந்து கதைத்திருந்த நாட்கள்... கிணற்றுக் கட்டிலும் கோயிற் திண்ணையிலும் தேர்முட்டிப் படிகளிலும் நிலவொளியிலும் கும்மிருட்டிலும் கூடியிருந்த நாட்கள்... தொலைவில் பனி கொட்டும் பூமியில் குச்சறையில் தனியனாய் அன்றி இணையாய் உடல் போர்த்தி வாழும் நண்பா, நினைவில் நிழலாடுகிறதா அந்த நாட்களின் களிப்புக்கள்! பத்துப் பதினைந் தென்று கூடியிருந்தோம் குந்தியிருந்தோம் படுத்திருந்தோம் சாய்ந்திருந்தோம்... பல்விடயம் அலசித் தர்க்கப்பட்டோம் வயது வேறுபாடின்றி வளர்ந்திருந்தது நம் நட்பு. அயல் ஏசும் அளவிற்கு உச்சக் குரலில் உரையாடினோம். ஒன்றாய்ச் சேர்ந்து பாடினோம். அந்த- இனிமை நிறைந்த நாட்கள் இன்னமும் நினைவில் உள்ளதா? ஜேர்மன்....  டென்மார்க்... கனடா... சுவீஸ்... சவூதி...  ஓமான்... குவைத்... என ஒவ்வொருவராய் அகல மிஞ்சிய நாம் இருவரோ... மூவரோ... ஆயினும் கூடுகிறோம் பாடுதல் இலையெனிலும் பேசுகிறோம். தர்க்கப்படல் இலையெனிலும் விவாதிக்கின்றோம். நிலவின் ஒளியையும் கா

பெண்களை புடவை கட்டுமாறு நிர்ப்பந்திக்கும்...

அலுவலகங்களில் பெண்கள் புடவை (சாறி) கட்டிக்கொண்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்தப் புடவைகட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது பார்க்கப்பட வேண்டும். இதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தை அலங்காரமாக தமிழர் கலாசாரம் என்ற மூடுமந்திம் கற்ப்பிக்கப்படுகின்றது. தமிழர் கலாசாரம் எதுவென்பது கேள்விக்குறியானது. கண்ணியமான உடுப்பு உடுத்திக்கொள்ளவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் விரும்புகின்றார்கள். ஆனாலும் எந்தவித த்திலும் கண்ணியமாக கருதப்பட முடியாத புடவையானது பெண்ணுக்குத்திணிக்கப்படுகின்றது. பெரும்பாலான இளம் பிள்ளைகள் சல்வார் கமிஸ்  இடுப்போ எடுப்போ தெரியாத வண்ணம் அணிந்துகொள்ளவே  விரும்புகின்றார்கள். ஆனால்யாழ்ப்பாண ஆணாதிக்கவாதம் இடுப்பும் எடுப்பும் காட்டும் புடவையையே தமிழ் கலாசாரம் என்று விதந்தோதுகின்றது. திருமணமான பெண்கள் தமது வசதி கருதி விரும்பி புடவை கட்டிக்கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை. ஆனால் இளம் பெண்கள் இந்த புடவையை தினமும் வரிந்து கட்டி மடிப்பு மடித்து அதுவும் மோட்டார் சயிக்கிளில் வரவேண்டும் என்று ஏன் தான் கரைச்சல் கொடுக்கின்றதோ இந்த ஆண்வர்க்கம். ஆண்வர்க்

மனிதம் எங்கே?

தெருவில் இறங்கி மனிதத்தை தேடுகிறேன் உருவில் அன்றி உணர்வில் காணேன்! விரக்தியின் விளிம்பில் தெரிவது உலகம் பூசலின் அழிவில் பூரிக்கும் மனிதர்! இனங்கள் குலங்கள் மனங்கள் குளங்கள் தினங்கள் மறையும் சனங்கள் அழியும்! பிணமோ நாட்டில் குணமோ ஏட்டில் பணமோ ஆட்சியில் கணமோ சிரிக்கும்! தூங்கும் மனிதம் விழிக்கும் நாளில் களிக்கும் உலகம் தெளிக்கும் இன்பம் -இது இளமையில் கிறுக்கியது அழ. பகீரதன்

புத்துலகொன்று...

படம்
புதிதாய் மலர்ந்த புத்துல கொன்று அதிலே இன்பம் தித்திப்பு கண்டு வதிவார் ஒன்றாய் கூடியவர் நின்று சாதித்து காண்பார் சரித்திரம் ஒன்று! கொலைவெறி கொண்ட கொடுஞ் சிலையர் நிலைகொள் அடிமைத் தனஞ் செய்வார் புலையரும் தீயரும் கொடியருங் கள்வரும் இலையிந்த இன்னல் இலாத உலகினில்! தீங்கெளா நெஞ்சம் தீரமுடை உள்ளம் எங்கெனும் காணா அன்பு மனம் ஓங்கிடு முழைப்பு கொண்டிடு மனிதர் தேங்கியே வாழ்வர் எழில்மிகு உலகில்! பாதகம் இல்லைப் பணிவும் இல்லை சாதகம் பார்த்துச் சாதிப்ப தில்லை பேதமை நெஞ்சம் கொண்டவ ரில்லை சாதனை செய்தே சரித்திரம் படைப்பர்! சாதிகள் இன்றி வகுப்புக ளின்றி சகலரும் சமம் சரிநிகர் என்று வர்க்கம் ஒழித்து வசந்தம் காண்பர் சொர்க்கம் இதுவே வேறுலக மில்லை! கொடுமை இல்லாக் கொள்கை வாழ்வு விடுதலை கொண்ட விவேக வாழ்வு கெடுதல் இன்றி வளர்ந்தே வரும் புத்துலகு ஈதில் புதுமை வாழ்வு! அழ.பகீரதன்

ஏனுந்த கலாசாரம்...?

உண்மைகள் கசக்கத்தான் செய்யும் நன்மைகள் விளையும் என்ற எதிர்பார்ப்பில் தான் எல்லாம்... யாழ்ப்பாணத்துக் கலாசாரம் யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்று வாய் கிழியக் கத்தல் எதிர் வீட்டில் கலியாணம் எடுப்பாய் காட்டி செய்தனர் என்றால் தன்வீட்டில் தன்பிள்ளைக்கு இன்னும் அதிகம் எடுப்பாய் காட்டச் செய்வதுவோ எங்களது கலாசாரம்? முத்துப் பந்தலும் மூக்கில் விரலை வைக்கும் தடபுடல் வீடியோப் பதிவும் உடன் வருமோ ஆயுளுக்கு கடன் பட்டு சோக்கு காட்டிப்போட்டு வீட்டில் வரிசையாய் கடன் கொடுத்தவர் நின்றால் அக்கம் பக்கம் என்ன நினைக்கும் பெருமை எதுவென அறியாப் பெருமையுள் ஆட்பட்டு ஏனிந்த ஆட்டம் பாட்டம் கூத்து... சோக்குக் காட்டி மணம்முடித்து வைத்து உமக்குள் மகிழும் பெற்றோரே கூடி இணைந்த மணமக்கள் தமக்குள் கூடி  மகிழ்வு கூட்டவென்று ஒரு ஐம்பதினாயிரம் கைக்குள் திணித்து கனிமூன் சென்றுவருக என்று வழியனுப்பி வைக்கும் பழக்கம் உமக்குள் உள்ளதுவோ... இல்லை.. இல்லை.... என்றால் ஏனுந்த கலாசாரம்...? அழ. பகீரதன்

சங்கதி கேளீரோ?

ஊரிலுள தனவந்தர் உவந்து தந்த பணத்தில் அருகமைந்த காணி ஆலயத்தின் உரித்தாயிற்று தேரிளுக்க நிலமது போதாதெனத் தானோ விசாலமாக நிலத்தை விரித்து விட்டால் பார்வைக்கு கோயில் எடுப்பாய் தெரியுமெனவோ அடுக்காய் பணம் கொடுத்தார் தனவந்தர் அது சரிதான் அவரது கொடைவள்ளல் தன்மையது மெச்சத் தக்கது தான். நிலத்தைப் பெற்ற நிர்வாகத்துக்கோ ஏகப்பட்ட குசி கூட்டம் போட்டனர் இந்தப் பெரிய நிலம் இப்படியே விட்டால் ஊரிலுள சிறுவர் கெந்திப் பிடிக்க வருவர் கிரிக்கற் கூட விளையாடுவர் நாடி வந்த இளைஞர் கழகம் அமைத்து பந்து உருட்டுவர் கண்ட சாதிப் பயலைச் சேர்ப்பினம் பெண் பிள்ளைகள் தெருவில் சென்றுவர கரைச்சல் கொடுப்பினம் விடக் கூடாது விரைவாய் மண்டபம் ஒன்று அமைப்பம் என்ற தீர்மானம் ஏகமனதாய் எடுத்தாச்சு அன்னதான மண்டபம் எழும்புது பாருங்கோ என்ன தம்பி அன்னதானம் சிறந்ததன்றோ ஏன்காணும் இப்பிடி எதிர்த்துக் கதைக்கிறீர்! சொன்னால் குறை விளங்காதையுங்கோ இந்தத் தானம் இரப்பவர்க்கன்று சொந்த வீடும் சொகுசு வாழ்வும் பெற்று வாழும் பெரியவர்கள் மடிப்பு குலையா பட்டு வேட்டி சால்வையோடு இட்டு உண்ணும் கூட்டுத்தானண்ணை இருந்தா

வியப்பாய் ஒரு விழா

நான் படித்த ஆரம்பப் பாடசாலை பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலை. இதனை நாங்கள் காலையடிப் பள்ளிக்கூடம் என்று தான் சொல்லுவோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக சிறுவர்கள் சிலர் ஒரு அழைப்பிதழ் தந்துவிட்டு போனதாக வீட்டில் சொன்னார்கள். அந்தப் பாடசாலைக்கு அந்த நிகழ்வுக்கு எனது சின்ன மகனை கூட்டிக்கொண்டு போனேன். அங்கே பார்த்தபோது பலசிறுமிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலர் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனது விருப்புக்குரியவர் என்று கூட சொல்லலாம். அவர் பெயர் தனுசன். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து இரண்டாவது வரிசையில் அமர்கின்றேன். மேடையில் வீற்றிருந்தவர்கள் தென்மாராட்சி கல்வி வலய பிரதி ப் பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்கள். அவரும் இந்த பாடசாலையில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். மற்றவர் யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகப் பிரிவுக்குப் பொறுப்பாக இருப்பவர் திரு நற்குணேஸ்வரன் அவர்கள். அவரும் இந்தக் கல்லூரியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். இன்னொருவர் வட்டுக்கோட்டை  ஆர

இந்தியாவில் இருந்தபோது எழுதிய கவிதை ஒன்று...

நான் இந்தியாவில் சென்னையில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது இருப்பிடத்திற்கு பல நண்பர்கள் ஊரிலிருந்தும் வருவார்கள். போர் நடந்த காலம் ஆதலால் அவர்களில் பலர் வெளிநாடு சென்று வாழ்வதற்காகவே  புலம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே ஆகும். அவர்களது அந்த பயணம் ஏனோகூடிய சீக்கிரம் கைகூடிவர  வில்லை. அப்போது அவர்களில் சிலர் தமது மனைவியின் கடிதத்தை என்னிடம் வாசித்துச் சொல்லச்சொல்லுவார்கள். அவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் போதிய அறிவு இல்லாததால் எனக்கு அந்த பணியை சுமத்துவார்கள். அந்த அனுபவத்தில் நான் கற்பனையில் எழுதிய கவிதை தான் இது. காதலிக்கு கடிதம் நிலம் நோக்கி எனை நோக்கும் நீள் விழியாளே விழிப்பார்வை நீக்காது பேரூந்தில் ஏற்றியெனை அனுப்பி வைத்தாயே தொலைதேசம் சென்று பெரும் பொருள் சேர்க்க என்று! இன்னும் நான் இந்திய மண்ணில் தான் இந்தியாவும் வெளிநாடுதான் சொந்தமாய் பணம் சேர்க்க வழியிலை எனிலும் சொந்த நாட்டின் துக்கங்கள்... பீதியில் தேயும் ஆயுள்.. மனச்சஞ்சலங்கள் இங்கெனக்கு இல்லை! எனிலும் பருவத்தால் நிறைந்த உன்னழகைப் பார்த்திருக்கவும்