இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுமைக் கவிஞன்கவிகளிலே

கடவுளை காக்கைச் சிறகிலே கண்டான் கடமை முடிக்க சக்திக்கு விண்ணப்பித்தான் மடமை அகற்ற வென்று மனதில் திடங் கொண்டவன் தீட்டினான் கவிதைகள்! தமிழின் இனிமையை நானில மறிந்திட அமிழ்த மெனப் போற்றி அவன் தமிழின் செழுமையை யாவரும் உணரத் தாமிசைந்த படி புனைந்தான்  பலகவி வந்தே மாதரம் என்ற தாரக மந்திரத்தை வெள்ளையர் ஆட்சியில் மக்கட்கு தந்திரமாய் எடுத்துக் கூறி வீரச் சுதந்திரம் பெற பாடினான் பலகவி: பஞ்சமோ பஞ்ச மென்று நிதம் பஞ்சக் கவிபாடும் பல மக்களது துஞ்சத் துயர் போக்கு சிலரை வஞ்சித்து பல பாட்டும் புனைந்தான் சாதி இரண்டே வேறில்லை என பேதி யிலாததை யகற்ற அவன் சேதிகள் பல சொல்லி மக்களுக்கு போதித்து புனைந்தான் பல கவிகள் பாதிமனித பாவ வாழ்வு அகல பாடல் பல பாடினான் பாரதி அவன் கவிதை என்றும் வாழ்க! அவன் புகழ் எங்கும் ஓங்குக!                                                                     பேரம்.விஐயநாதன்