இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிவரும் காலங்கள்

மீண்டுமொரு முறை மீள நினைக்கின்றேன் ஆண்டு முப்பது ஆயிற்று ஆண்டவரொடு கூடி மாநிலக் கல்லூரியில் மலர்ந்த இளமையில் மாணவராய் நடந்த மலரும் நினைவுகள் அருள் நடராஜனின் அருமையான பேச்சிலும் மகாவிஷ்ணுவின் தினமும் கூறும் புதுக் கவிதையிலும் ஆண்டவர் எந்தன் காதோரம் கூறும் கைக்கூக் கவிதைகளிலும் கருணாநிதியின் கீழைக் காற்றுத் தந்த மரபுக் கவிதையின் உரம் மிக்க வரிகளிலும் தோய்ந்த எனது நாட்கள் மீள ஒருதடவை நினைக்கின்றேன் இரவி சங்கர் செங்குட்டுவன் சீனிவாசன் பாபுவென எனக்கிருந்த இனிய அந்த நட்பு வட்டங்கள் இனிநான் நாடி தேடி அடைந்திட என் காலமும் போதுமோ? அவரவர் குடும்பம் அவரவர் தொழில்கள் அவரவர் தேடல்கள் என நகர்ந்த ஆண்டுகள்... என் மனவெளி எங்கும் அந்த மூன்றாண்டுகளின் அனுபவ பதிவுகளோடு... இனிவரும் காலங்கள் தமிழக மண்ணில் என்பாதம் படியும். அழ பகீரதன்

யாபேரும் யாவர்க்கும்...

வலிமை பெறு அரசமைத்து தாமுயர்ந்து ஓரிருவர் சந்ததியே நிலமளந்து ஆண்டனுபவித்து மாந்தரை மிடிமை நிலைக்காளாக்கி ஆழ்கின்ற .உலகோ நீளும்? தொழிலாளர் நலன் வேண்டி தொய்வில்லா நெறியொன்றில் தொழிலாளர் தலைமையுற எழிற்சியுறு எம்மக்கள் எழுந்து நிலைமாற்றும் கொள்கையில் வளமெல்லாம் பொதுமை ஆக்கிடவே யாபேரும் யாவர்க்கும் துணையாக ஒருவர் எல்லோருக்குமாய் எல்லோரும் ஒருவருக்காய் நல்நெறியில் கூடுவரேல் செல்வமது சேருமே மிடிமையில் வீழ்ந்தார்க்கும்!