ஞாயிறு, 2 மார்ச், 2014

முன்மாதிரி

இன்றைய தகவல் தொழில்நுட்பகாலத்தில் உலகமயமாதல் நச்சுச்சூழலில் சிறுவர்களையும் குழந்தைகளையும் நல்வழியில் வளர்ப்பதும் ஆளாக்குவதும் பாரியபிரச்சனையாக சமூகத்திற்கு உள்ளது. இந்த இடத்தில் சனசமூகநிலையங்கள் எப்படி செயற்பட்டு சமூகத்தை நல்வழிப்படுத்துவது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த நிலையில் பனிப்புல்ம கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பனிப்புலம் அம்பாள்சனசமூக நிலையம்  சிறப்பான முடிவை எடுத்து சிறுவர் குழந்தைகளுக்கான அறநெறி சமூக நெறியில் வளர்த்தெடுப்பதற்காக நூலகம் ஒன்றை பாரிய செலவில் உருவாக்கியிருப்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கவிடயமாகும். எந்த வித அரச அல்லது நிறுவன ரீதியான உதவிகளோ ஒத்தாசையையோ எதிர்பாராமல் குடும்ப நிதிஅனுசரணையுடன் செய்த இந்தமுயற்சியை பின்பற்றுவதற்கு இதனை ஒரு முன்மாதிரியாக எல்லா சனசமூகநிலையங்களும் கருத்தில் கொள்ளுமா/ இதற்கு ஒத்துழைக்க அந்தந்த பிரதேசத்திலுள்ள பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்கள் எண்ணம் கொள்ளுவார்களா?

வியாழன், 13 பிப்ரவரி, 2014

யாழ்ப்பாணத்திலிருந்து தாயகம் இதழ் வெளிவந்துள்ளது

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் 84 வது இதழ் வெளிவந்துள்ளது. ஜனவரி-மார்ச் இதழாக வெளிவந்துள்ள இதழில் சி.சிவசேகரம், தெ.ஞா. மீநிலங்கோ, க. சிவகரன், க.தணிகாசலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் ஶ்ரீலேக்கா , அநாதரட்சகன், சு.தவச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகளும்  மு. மயூரன். மீநிலங்கோ, தி.அனோஜன், எஸ்.யாதவன், சிவசேகரம், சோ.பத்மநாதன், குழந்தை ம. சண்முகலிங்கம்  ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன, தொடர்புகளுக்கு ஆசிரியன் தாயகம் ஆடியபாதம் வீதி கொக்குவில்.

சனி, 8 பிப்ரவரி, 2014

அறிவெனும் சுடரேற்றுவோம்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தகப் பண்பாட்டு பயணத்திற்காக..தணிகையினால் எழுதப்பட்ட பாடல்

அறிவெனும் சுடரேற்றுவோம் -என்றும் 
அணையாது காப்போம்
அன்பெனும் நெய்யுருக்கி பண்பெனும் திரிமீது
அறிவெனும் சுடரேற்றுவோம்
மக்கள் மனங்களில் ஒளியேற்றுவோம்
(அறிவெனும்)
அறியாமை பேரிருள் அகல 
ஆழ்ந்த உறக்க நிலை கலைய
மனங்களில் அகந்தை சுயநலம் மறைய
மானிட அன்பெங்கும் மலர
(அறிவெனும்)
பிறர் படும் துயர் கண்டு உதவிடும்
உளம் கொண்ட வெள்ளைக் கமலங்களாய்
இளம் உள்ளக் கமலங்கள் மலர
(அறிவெனும்)

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

அறிவாலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டொன்றின் நிறைவு நினைவுகள்.நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலை நூலகம் ஆரம்பிக்கப்படு ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம்.