புதுப் பயணமதில்..

போரில் கொள்ளைகள் என்றும் நடக்கும்
போர் கொள்ளைக்காகவும் நடக்கலாம்
போர் போரிற்காகவும் நிகழ்த்தலாம் 
சுரண்டலும் ஊழலும் 
சுத்துமாத்து பண்ணலும்
அரண்டு ஓடிவிடுமோ 
மிரழ்வரோ 
ஆட்சி ருசியில் பாராளுமன்ற 
அரசியல் பண்ணும் பேர்வழிகள்..
தானே மாறும் என நினைத்திடில் 

முடிவுறுமோ?
பாராளுமன்ற வழிமுறைகள் பலித்திடுமோ
போராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு!
போரிட்டு தோற்பதுவும் 

வெல்வதும் நிகழும்
போர் போரை மேவும் 

போர் போரால் வெல்லும்
போர் அழிவில் பூரித்து மகிழ்வர் ஆழ்பவர்...

எனில் எழுவரோ ஏதிலிகள்
நனிபேருவகை அடைந்திட
நலிந்தவர்க்கும் ஏது உண்டோ?
சலித்திடவோ ஓட்டுபோட்டே...
நாளை வேளைவரும் 
அரசியல் நிலை உணர்ந்த
மக்கள் திரள் வெகுண்டெழும் 

புதுப் பயணமதில்
வெகுஜனப் போராட்டப் பாதையதில்
மக்கள் அதிகாரம் பெற்றிடில் 

மாற்றம் நிகழுமே! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது