செவ்வாய், 25 ஏப்ரல், 2017

இனிவரும் காலங்கள்

மீண்டுமொரு முறை
மீள நினைக்கின்றேன்
ஆண்டு முப்பது ஆயிற்று
ஆண்டவரொடு கூடி
மாநிலக் கல்லூரியில்
மலர்ந்த இளமையில்
மாணவராய் நடந்த
மலரும் நினைவுகள்
அருள் நடராஜனின்
அருமையான பேச்சிலும்
மகாவிஷ்ணுவின்
தினமும் கூறும்
புதுக் கவிதையிலும்
ஆண்டவர் எந்தன்
காதோரம் கூறும்
கைக்கூக் கவிதைகளிலும்
கருணாநிதியின்
கீழைக் காற்றுத் தந்த
மரபுக் கவிதையின்
உரம் மிக்க வரிகளிலும்
தோய்ந்த எனது நாட்கள்
மீள ஒருதடவை நினைக்கின்றேன்
இரவி சங்கர் செங்குட்டுவன்
சீனிவாசன் பாபுவென
எனக்கிருந்த
இனிய அந்த நட்பு வட்டங்கள்
இனிநான் நாடி
தேடி அடைந்திட
என் காலமும் போதுமோ?
அவரவர் குடும்பம்
அவரவர் தொழில்கள்
அவரவர் தேடல்கள்
என நகர்ந்த ஆண்டுகள்...
என் மனவெளி எங்கும்
அந்த மூன்றாண்டுகளின்
அனுபவ பதிவுகளோடு...
இனிவரும் காலங்கள்
தமிழக மண்ணில்
என்பாதம் படியும்.

அழ பகீரதன்

2 கருத்துகள்:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான எண்ணங்கள்
சிந்தித்துப் பார்க்கிறேன்

அழ. பகீரதன் சொன்னது…

நன்றி