ஆழும் பரம்பரையுடன் கைகோர்த்து...


ஒன்றும் செய்வதற்கு முடியாது
முனகிய பொழுதுகள் மறப்பமோ?
ஏன் பிறந்தோம் என ஏங்கிய நாட்கள்
ஏன் இந்நிலையில் தாழ்ந்தோம்
எனத் தவித்த நாட்கள்
ஒரு பொழுது நினைத்தோமோ
தெரு வெங்கும் மனிதர்
உயிர் காக்க
ஓடஓட விரட்டவும்
சுடவும் குண்டுமாரி பொழியவும்
ஓங்கிய குரல்கள்
ஓவென கத்தும் கணங்கள்
யாரேனும் நினைத்தோமோ
பாவப்பட்ட மக்களா அவர்கள்
பஞ்சப்பட்ட மக்களோ அவர்கள்
ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை
ஆழ நினைத்ததனால்
மாண்டனரே...
இன்றோ
ஆழப்படுவோர் அனாதரவாய்
அண்ட வெளி எங்கும்
துண்டமாய் கிடக்க...
ஆண்டபரம்பரை
மீண்டும் எழுகிறது
மீழ மீழ
ஆழப்படுவோர் ஈய்கின்ற
ஓட்டுக்கள் மூலம்
ஒட்டுமொத்த மக்கள் சக்தியை
உலகுக்கு காட்டி
உலகை ஆழும் பரம்பரையுடன்
கை கோர்த்து
மேலும் மேலும்
அடிமை மிடிமை நிலையில்
மீளாது நாம் இருத்தற்கே!

இது சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் எழுதிய கவிதை செம்மையாக்கத்துடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது