பெண்களை புடவை கட்டுமாறு நிர்ப்பந்திக்கும்...

அலுவலகங்களில் பெண்கள் புடவை (சாறி) கட்டிக்கொண்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்தப் புடவைகட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது பார்க்கப்பட வேண்டும். இதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தை அலங்காரமாக தமிழர் கலாசாரம் என்ற மூடுமந்திம் கற்ப்பிக்கப்படுகின்றது.
தமிழர் கலாசாரம் எதுவென்பது கேள்விக்குறியானது. கண்ணியமான உடுப்பு உடுத்திக்கொள்ளவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் விரும்புகின்றார்கள். ஆனாலும் எந்தவித த்திலும் கண்ணியமாக கருதப்பட முடியாத புடவையானது பெண்ணுக்குத்திணிக்கப்படுகின்றது. பெரும்பாலான இளம் பிள்ளைகள் சல்வார் கமிஸ்  இடுப்போ எடுப்போ தெரியாத வண்ணம் அணிந்துகொள்ளவே  விரும்புகின்றார்கள். ஆனால்யாழ்ப்பாண ஆணாதிக்கவாதம் இடுப்பும் எடுப்பும் காட்டும் புடவையையே தமிழ் கலாசாரம் என்று விதந்தோதுகின்றது.
திருமணமான பெண்கள் தமது வசதி கருதி விரும்பி புடவை கட்டிக்கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை. ஆனால் இளம் பெண்கள் இந்த புடவையை தினமும் வரிந்து கட்டி மடிப்பு மடித்து அதுவும் மோட்டார் சயிக்கிளில் வரவேண்டும் என்று ஏன் தான் கரைச்சல் கொடுக்கின்றதோ இந்த ஆண்வர்க்கம். ஆண்வர்க்க நலன்கள் என்ன அபத்தமானதா?


கருத்துகள்

கவியாழி இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான கேள்வி .கலாசாரம் என்பதும் கண்ணியம் என்பதும் உணர எல்லோருமே
வேண்டும்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அத்தரத்தின் அர்த்தமது
என்ன சொல்வேன்
எங்கேன் பேன்
இத்தரத்தில் இன்னா
செய்திட நினைத்தால்
பார்புகழ அண்ணாரா
செவிமடுப்பர்..
பத்திரத்தில் உள்ளதையே
பாதிப்பேர் கைந்தாலிப்
பேனுவதால்
சித்திரையர் இது தான்
அனிய வேண்டுமனெச்
செப்பிடுவா
செலுதாங்காட்டுக் கிளியே
உத்தரவே....மத்தகமே.
ஆதிரா இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை..கலாச்சாரம் என்பது புடவையில் இல்லை..சரி வர புடவை கட்டி பழகாதவர்கள் படும் பாடு இவர்களுக்கு புரிவதில்லை போலும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது