ஒப்புவதோ!





நிலங்கள் மெழுகப்படுகின்றன
தலங்கள் செழுமைப்படுகின்றன
வீதிகள் விசாலிக்கப்படுகின்றன
விரைவுந்திகள் வலம்வருகின்றன
மண்டபங்கள் சிலிர்க்கின்றன
வாகனங்கள் செல்கின்றன
தொடருந்திகள் வருகின்றன
உடைகள் கவர்கின்றன
ஹோட்டல் உண்டிகள் உருசிக்கின்றன
பதவிகள் கிடைக்கின்றன
பெருமிதங்கள் தோன்றுகின்றன
நாடுகள் வரவேற்கின்றன
தொலைபேசிகள் கதறுகின்றன
இணையம் எல்லாம் தருகின்றன
அட்டைகள் எங்கள் வசம்
தட்டினால் போதுமாம்
தடையின்றி வருமாம் எல்லாமும்
எனிலும்
மனங்கள் விரிவதில்லை
அகம் மலர்வதில்லை
ஏழ்மையில் மாற்றமில்லை
நித்திய வாழ்வில்
சித்தமதில் சிறப்பில்லை
உழைப்போ கிடைப்பதில்லை
உணவுக்குள்ளோ நஞ்சு
அடகு வைக்கப்பட்டது
எங்களது இருப்பு!
உலகமயமாதலாய் விரிந்த
முதலாளியம் செழிக்கவோ
வந்தன வந்தன எல்லாம்
எனில்
தோழமை தொலைத்த
தாழ்வதை
ஒப்புவதோ நாம்!

நன்றி : தாயகம் 86

அழ பகீரதன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது