ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

யாபேரும் யாவர்க்கும்...

வலிமை பெறு அரசமைத்து
தாமுயர்ந்து ஓரிருவர் சந்ததியே
நிலமளந்து ஆண்டனுபவித்து
மாந்தரை மிடிமை நிலைக்காளாக்கி
ஆழ்கின்ற .உலகோ நீளும்?
தொழிலாளர் நலன் வேண்டி
தொய்வில்லா நெறியொன்றில்
தொழிலாளர் தலைமையுற
எழிற்சியுறு எம்மக்கள் எழுந்து
நிலைமாற்றும் கொள்கையில்
வளமெல்லாம்
பொதுமை ஆக்கிடவே
யாபேரும் யாவர்க்கும் துணையாக
ஒருவர் எல்லோருக்குமாய்
எல்லோரும் ஒருவருக்காய்
நல்நெறியில் கூடுவரேல்
செல்வமது சேருமே
மிடிமையில் வீழ்ந்தார்க்கும்!

1 கருத்து:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

நன்று நன்று
இன்று உணர்வோம்