இழக்கவும் கூடுவதோ?

மாலை முழுவதும் விளையாட்டென
மாணவர் இருந்த காலமுண்டு -நாம்
மாணவராய் இருந்த காலமது
கூண்டுக் கிளி போல் பள்ளிக்குள்
கூடிப் பேசிக் களிப்பதுவோ
பிரம்பெடுத்து அடிப்பர் ஆசிரியர்
தரம் பிரித்து கற்பிக்கும் நடைமுறையில்
மனம் ஒப்பிட மறுத்து
நாடி நண்பருடன் விளையாடிட
நாட்டம் கொள்ள மாலையில்
வீட்டுக் கோடியில் இடம் தேடி
நாட்டி வைத்த இன்பம் கோடி
கெந்திப் பிடித்தலிலும் கோலி விளையாட்டிலும்
தாயம் உருட்டலிலும் சிப்பி பெறுக்கலிலும்
கொக்கான் வெட்டலிலும்
கிட்டி புள்ளு விளையாட்டிலும்
கிளித்தட்டு விளையாட்டிலும்
கெட்டித்தனம் காட்டிடும் அந்தக்
காலம் மறப்பதும் உண்டோ?
கனிவில் மனம் இலயித்ததே!
உண்டமோ உடுத்தமோ அறியோம்
கண்டது கருத்தொருமித்த விளையாட்டே!
பண்டுதொட்டு எம் பரம்பரையினர்
பழக்கிவைத்த விளையாட்டு
பாரம்பரியம் காத்த பண்பாடு...
ஆரம்ப பள்ளியில் ஆரம்பித்த சினேகம்
தேர்ந்த நட்பாய் நாடொறும் வளரும்...
நீள் புவியில் இன்றோ நீள் பிரிவில்
ஆள் காணா புலம்பெயர்வுகள் ஆனாலும்
அன்று தொட்ட கைகளை இன்றும் அவாவும்
அன்பு கொண்டு அணைக்கத் தோன்றும்...
விளையாட்டில் விளைந்த இணைப்பை
இழக்கவும் கூடுவதோ?  இதயம் கனக்குமே!

அழ பகீரதன்


கருத்துகள்

வே.நடனசபாபதி இவ்வாறு கூறியுள்ளார்…
//விளையாட்டில் விளைந்த இணைப்பை
இழக்கவும் கூடுவதோ? இதயம் கனக்குமே!//

மனதைத் தொட்ட வரிகள். பாராட்டுக்கள்!
alapaheerathan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஐயா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது