கோர்க்காரோ கைகள்!

ஆணாதிக்க காவிகளாய் அன்றுதொட்டுப் பெண்கள்
தோணாதே இவர்க்கு தமது அடிமை நிலையது?
வீணான   வார்த்தை வீச்சினையே வீசிடுவர்
பண்பென்று கொள்வன பாழவர்க்கே என்றெண்ணார்
பதிவிரதை எனவும் பத்தினி எனவும் கொள்வர்
மதிகொண்ட மங்கையராய் திகழ்ந்திட முயன்றால்
கூசாமல் வேசையென மொழிதலை செய்வர்
கூற்றொன்று கூறினால் அடங்காப்பிடாரி என்பர்
அடுத்தவரை ஆட்டக்காரி எனவும் நவில்வர்
விடுப்புநிலை விட்டுச் சிந்திக்க முயலாரோ
தொடுக்காரோ தோழரென கோர்க்காரோ கைகள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்