இடுகைகள்

சிறுவர் இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயரப் போகும் பாப்பா

படம்
சின்னச் சின்னப் பாப்பா! சிவந்த நல்ல பாப்பா! கண்ணைச் சிமிட்டி என்னைக் கவரும் நல்ல பாப்பா! பஞ்சைப் போன்ற உடலால் நெஞ்சைக் கவரும் பாப்பா! கொஞ்சச் சொல்லி என்னைத் தஞ்சம் அடையும் பாப்பா! பாவம் என்பது அறியாப் பச்சை உள்ளப் பாப்பா கோபம் ஆசை குரோதம் கொள்ளா நல்ல பாப்பா! மனதைக் கவரும் விதமாய் மாண்பு கொண்ட பாப்பா உலகைக் காணும் உவகையில் உயரப் போகும் பாப்பா பூபாளம் கவிதை இதழில் 1983 ஜனவரியில் பிரசுரமான கவிதை சில மாற்றங்களுடன் அழ பகீரதன்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை

படம்
ஒரு பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. நாள் முழுவதும் தாயுடன் இருக்கவே குட்டிக் குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டுப் பிரிந்து சென்றதே இல்லை. ஒரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது: "மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதலளிக்கக் கூடாதா?" குட்டிக் குதிரை தலையை அசைத்துச் சொன்னது: "ஏன் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்." மிகவும் மகிழ்ந்துபோன தாய்க்குதிரை சொன்னது: "நல்ல பையன், இப்ப எனக்காக கோதுமை மூட்டையைச் சுமந்து கொண்டு மில்லுக்கு போகவேணும்." குட்டிக்குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க்குதிரை ஏற்றிவிட்டது.  அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக்குதிரை சொன்னது: "அம்மா, என்னுடன் நீயும் வாவேன்." "ஏன்? எனக்கு உன்னுடன் வர நேரமிருந்தால் உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லையே! நீ நேராக மில்லுக்குப் போய் விரைவாக வீட்டுக்குத் திரும்பவேண்டும். இரவுச் சாப்பாட்டுக்காக நான் காத்திருப்பேன்." முதுகில் கோது...