மனமாற்றம் வந்திடுமோ?

இப்படி இருப்பதால் தான்
இப்படி நிகழ்கின்றன எனில் 
எப்படி? எப்படி..? 
ஆணியம் பெண்ணை இழிவுபடுத்த
வேணியம் கொண்டு இருப்பதெனில்
எப்படி? எப்படி...?
சினிமா, சித்திரம், பத்திரிகை

இணையம் எனத் தொடர்ந்து
பெண்ணை 

அரை நிர்வாணமாக்கி
இரசனைக்காய் காட்டுவரெனில்
ஆண்கள் பெண்நிலை புரிந்து

எண்ணத்தில் கொள்வரோ
மனமாற்றம் வந்திடுமோ?
இன்றெம்
இளையவர் போக்கு பிழையெனில்
இத்தவறுகள் நிகழும் வண்ணம்
இவர்கள் நினைப்பினை இனியும்

வழிவழியாய் வந்த
பெண்நிலைச்சித்தரிப்பே
வழிப்படுத்திடுமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்