இடுகைகள்

சுயசரிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிவரும் காலங்கள்

மீண்டுமொரு முறை மீள நினைக்கின்றேன் ஆண்டு முப்பது ஆயிற்று ஆண்டவரொடு கூடி மாநிலக் கல்லூரியில் மலர்ந்த இளமையில் மாணவராய் நடந்த மலரும் நினைவுகள் அருள் நடராஜனின் அருமையான பேச்சிலும் மகாவிஷ்ணுவின் தினமும் கூறும் புதுக் கவிதையிலும் ஆண்டவர் எந்தன் காதோரம் கூறும் கைக்கூக் கவிதைகளிலும் கருணாநிதியின் கீழைக் காற்றுத் தந்த மரபுக் கவிதையின் உரம் மிக்க வரிகளிலும் தோய்ந்த எனது நாட்கள் மீள ஒருதடவை நினைக்கின்றேன் இரவி சங்கர் செங்குட்டுவன் சீனிவாசன் பாபுவென எனக்கிருந்த இனிய அந்த நட்பு வட்டங்கள் இனிநான் நாடி தேடி அடைந்திட என் காலமும் போதுமோ? அவரவர் குடும்பம் அவரவர் தொழில்கள் அவரவர் தேடல்கள் என நகர்ந்த ஆண்டுகள்... என் மனவெளி எங்கும் அந்த மூன்றாண்டுகளின் அனுபவ பதிவுகளோடு... இனிவரும் காலங்கள் தமிழக மண்ணில் என்பாதம் படியும். அழ பகீரதன்

மகாகவி பாரதி நினைவுகளோடு…

படம்
அழ. பகீரதன் அப்போதெல்லாம் எனக்கு மகாகவி பாரதியார் கவிதைகள் என்றால் இரம்பவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்து அவரது முறுக்கு மீசையும் முண்டாசும் என்னைக் கவர்ந்தனவாக இருந்தன. அடிக்கடி அவரது கவிதைகளை படித்துப் படித்துப் பார்த்துச் சுவைப்பேன். 1981 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். மல்லிகை இதழிலோ எங்கோ மகாகவி நூற்றாண்டு விழா அடுத்தவருடம் வர இருப்பதாக படித்திருந்தேன். எனக்கு அவர் மேல் இருந்த ஈடுபாடு அதிகரித்துவந்தது. நானும் அவரைப்போல் கவி வடிக்க வேண்டும் என்ற வேகம் எனது மனதில் உருக்கொண்டது. எழுதி எழுதி கிழிப்பதும் மீண்டும் எழுதுவதுமாக எனது பொழுதுகள் நகர்ந்தன. அச்சில் வரும் கவிதைகளை படித்த நானும் எனது கவிதைகளை பத்திரிகைகளுக்கும் வானொலிக்கும் எழுதி அனுப்பலானேன். அவை வருமா வருமா என பார்த்தும் கேட்டும் நாட்கள் நகர்ந்தன. வரவில்லையே என்ற வேதனை எனக்கு இருந்தாலும் முயற்சியை விடவில்லை. மங்கையர் வதனம் பார்த்து மயங்கும் விடலைப்பருவம் அது. காதலும் காமமும் விரவிய கவிதைகளாக அந்த காலத்து கவிதைகள் அமைந்தன. நான் எழுதிய அவ்வாறான ஒரு கவிதையை எனது பள்ளித்தோ...

தமிழில் கையெழுத்திடுவது

அழ பகீரதன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். அப்போது இனவாதம் இருந்திருக்கலாம். 1978 என்று நினைக்கின்றேன். க பொ த சாதாரணப்பரீட்சைக்காக விண்ணப்பம் கொடுக்கும் நாள் எனக்கருதுகின்றேன். அன்று எங்களை ஆசிரியர் கையெழுத்து வைப்பதற்காக அழைத்திருந்தார். எல்லோரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார்கள். நான் தமிழில் தான் கையெழுத்து இட இருப்பதாக சொன்னேன். நண்பர்கள் தமிழில் கையொப்பம் வைத்தால் புள்ளிகளை வெட்டிக் குறைப்பார்கள் என்ற விதமாக பேசினார்கள். அவர்கள் என்னை பயம் காட்டினார்கள். நான் மசியவில்லை. அமைதியே உருவான எனக்கு இது கோபத்தை தான் ஏற்படுத்தியது. நான் தமிழில் தான் கையெழுத்து இடுவேன் என்று கத்தினேன். அவ்வாறே தமிழில் கையெழுத்து இட்டேன். நண்பர்கள் என்னை ஏளனம் செய்ததாக எனக்கு ஞாபகம். பரீட்சையும் வந்தது. அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டையிலும் தமிழில் கையெழுத்திட்டேன். பரீட்சைத்தினங்கள் தோறும் அதில் தமிழில் தான் கையெழுத்திட்டேன். சில மாதங்களில் பரீட்சைப் பெறுபேறும் வந்தது. நண்பர்கள் பயமுறுத்தியது போல் பெறுபேற்றில் எனக்கு புள்ளிகள் குறைக்கப்படவில்லை. எதிர்பார்த்தது போன்றே பெறுபேறு கி...