இடுகைகள்

அன்பர் ஆக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலர் பாடல்

காதலர் பாடல் ஈழத்து தேவன் பூதனார் காசு காசு காசு காசு காசு காசு காசு வருமுன்னே நான் மனிசனானேன் காசு வந்த பின்னேநான் மிருகமானேன் காசு வருமுன்னே நான் காதலிச்சேன் காசு வந்த பின்பேநான் பேதலிச்சேன் காசு வருமுன்னே நான் சிரிச்சுப் பேசினேன் காசு வந்த பின்பே நான் இறுக்கிப் பேசுகிறேன் காசுவருமுன்னே நான் ஒத்துழைச்சேன் காசு வந்த பின்பே நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று எதுக்குச் சொல்கிறேன் பதுங்கிப் பாயும் மிருகமாகி மாறிப் போனேனே! நன்றி - 'தாயகம்' ஏப்பிரல் ஜூன் 2014

அறிவெனும் சுடரேற்றுவோம்

படம்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தகப் பண்பாட்டு பயணத்திற்காக..தணிகையினால் எழுதப்பட்ட பாடல் அறிவெனும் சுடரேற்றுவோம் -என்றும்  அணையாது காப்போம் அன்பெனும் நெய்யுருக்கி பண்பெனும் திரிமீது அறிவெனும் சுடரேற்றுவோம் மக்கள் மனங்களில் ஒளியேற்றுவோம் (அறிவெனும்) அறியாமை பேரிருள் அகல  ஆழ்ந்த உறக்க நிலை கலைய மனங்களில் அகந்தை சுயநலம் மறைய மானிட அன்பெங்கும் மலர (அறிவெனும்) பிறர் படும் துயர் கண்டு உதவிடும் உளம் கொண்ட வெள்ளைக் கமலங்களாய் இளம் உள்ளக் கமலங்கள் மலர (அறிவெனும்)