இடுகைகள்

இலக்கிய செய்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு நாவல்கள் விமர்சன அரங்கு

படம்

இலக்கி்யப் பயிலரங்கு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியப் பயிலரங்கு(சிறுகதை கவிதைப் பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும்) எதிர்வரும் 23.24 ஏப்பிரல் 2016 காலை 9மணி தொடக்கம் மாலை 4 மணிவரையும் சனி ஞாயிறு ஆகிய இருதினங்களிலும் கொக்குவில் இல 62, கே.கே.எஸ் வீதி, தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 2016.04.15ஆம் திகதிக்கு முன்பதாக இல 62 கே. கே.எஸ்.வீதி, கொக்குவிலிலுள்ள பேரவையின் பணிமனையிலோ அல்லது 0775201671 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு மேற்கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தாயகம் இதழ் வெளிவந்துள்ளது

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் 84 வது இதழ் வெளிவந்துள்ளது. ஜனவரி-மார்ச் இதழாக வெளிவந்துள்ள இதழில் சி.சிவசேகரம், தெ.ஞா. மீநிலங்கோ, க. சிவகரன், க.தணிகாசலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் ஶ்ரீலேக்கா , அநாதரட்சகன், சு.தவச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகளும்  மு. மயூரன். மீநிலங்கோ, தி.அனோஜன், எஸ்.யாதவன், சிவசேகரம், சோ.பத்மநாதன், குழந்தை ம. சண்முகலிங்கம்  ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன, தொடர்புகளுக்கு ஆசிரியன் தாயகம் ஆடியபாதம் வீதி கொக்குவில்.

book release3

படம்
கனடாவில் எனது கிராம மக்களின் அமைப்பான பண் கலை பண்பாட்டு கழகம் ஒழுங்கு செய்த எனது கவிதைத் தொகுப்பான எப்படியெனிலும் நூல் அறிமுகவிழாவில்

வியப்பாய் ஒரு விழா

நான் படித்த ஆரம்பப் பாடசாலை பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலை. இதனை நாங்கள் காலையடிப் பள்ளிக்கூடம் என்று தான் சொல்லுவோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக சிறுவர்கள் சிலர் ஒரு அழைப்பிதழ் தந்துவிட்டு போனதாக வீட்டில் சொன்னார்கள். அந்தப் பாடசாலைக்கு அந்த நிகழ்வுக்கு எனது சின்ன மகனை கூட்டிக்கொண்டு போனேன். அங்கே பார்த்தபோது பலசிறுமிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலர் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனது விருப்புக்குரியவர் என்று கூட சொல்லலாம். அவர் பெயர் தனுசன். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து இரண்டாவது வரிசையில் அமர்கின்றேன். மேடையில் வீற்றிருந்தவர்கள் தென்மாராட்சி கல்வி வலய பிரதி ப் பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்கள். அவரும் இந்த பாடசாலையில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். மற்றவர் யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகப் பிரிவுக்குப் பொறுப்பாக இருப்பவர் திரு நற்குணேஸ்வரன் அவர்கள். அவரும் இந்தக் கல்லூரியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். இன்னொருவர் வட்டுக்கோட்டை ...

காலையடி கிராமத்தில் கவிதை நூல் அறிமுகம் நிழல் படங்களாய்...

படம்
அழ. பகீரதனின் இப்படியும்… என்ற கவிதை நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு அவரது கிராமத்தில் அவரது தெருவில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இவ்விழாவில் கம்யூனிஸ்ட் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி வள்ளியம்மை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி விழாவில் பிரதி வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் அறிமுகவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை கலாநிதி ந. இரவீந்திரன் அவர்களும் ஆற்றினார். கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தான் பிறந்த ஊரில் இருபது வருடங்களிற்கு பிறகு மன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பண் கலை பண்பாட்டு கழக வெள்ளிவிழா

படம்
கனடாவிலுள்ள பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா இன்று (25.12.12) நடைபெற இருக்கின்றது. இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கும் தமது ஊர் கிராமம் என்ற உணர்வோடு வாழ்வது அறிவீர்கள். அந்த வகையில் ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடிதமது பண்பாட்டு அடையாளங்களை பேணும் வகையில் தமது ஊர் பெயர்களின் மன்றங்கள் அமைத்துச் செயற்பட்டுவருகின்றார்கள். அவ்வாறான ஒரு மன்றம் தான் பண்கலை பண்பாட்டுக் கழகம் என்பது. இது யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு சிறு நகரை அண்டியுள்ள ஊரான பணிப்புலம் என்ற கிராமத்தில் பிறந்து கனடாவில் வதியும் மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகத் திகழ்கின்றது. வருடந்தோறும் இந்த அமைப்பானது நவராத்திரி காலத்தில் வாணிவிழாவினையும் நத்தார் காலத்தில் ஒன்றுகூடல் கலை நிகழ்வையும் சிறப்பாக கொண்டாடிவருகின்றது. நாட்டியம் பாடல் நாடகம் என்ற கலை நிகழ்வுகளையும் சிறார் மத்தியில் கல்வி சார் போட்டிகளையும் நடாத்துவதோடு பண் ஒளி எனும் ஆண்டு மலரையும் வெளியிட்டுவருகின்றது.  அத்துடன் நின்றுவிடாது தமது கிராமத்தின் உயர்வுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கும் உதவி வருவதும் க...

சங்கானையில் 'இப்படியும்..' நூல் அறிமுகவிழா

புத்தூர் மேற்கு கலைமதி சனசமூகநிலையித்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட "இப்படியும்..." கவிதை நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23.12.2012 பிற்பகல் சங்கானை இலங்கை வங்கி மேல் மாடியில் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. சமூகநீதிக்கான வெகுஜன இயக்கத் தலைவர்  திரு. மு. தியாகராஜா (இளைப்பாறிய உப அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் தொடக்க உரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் அறிமுக உரையை கவிஞர் எஸ். கருணாகரன் அவர்களும் மதிப்பீட்டுரையை சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் ந. குகபரன் அவர்களும் ஆற்றவுள்ளனர். ஏற்புரையை நூலாசிரியர் அழ. பகீரதன் ஆற்ற நன்றியுரை ஜெ.நிவர்சன் அவர்களால் ஆற்றப்படும். விழா தேசிய கலை இலக்கியப்பேரவை ஒழுங்கமைப்பில் நடைபெறும். 

யாழ்ப்பாணத்தில் தமிழறிஞர் கைலாசபதி நினைவு

படம்
தமிழறிஞரும் மாக்‌ஸிய ஆய்வாளருமான கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவையொட்டி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் பேராசிரியர் க. கைலாசபதியின் 30வது ஆண்டு நினைவு நிகழ்வு-2012 எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள செயல்திறன் அரங்க இயக்க மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிகழ்விற்கு திரு. சோ.தேவராஜா அவர்கள் தலைமை தாங்குகின்றார். திரு. க. சீலன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வு ஆய்வரங்கில் "ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து" எனும் தலைப்பில் ஆய்வுரையை செல்வி யாழினி யோகேஸ்வரன் வழங்க கருத்துரையினை திருமதி ச. ஜெயந்தி ஆற்றுகின்றார். "கல்வி முறைமையும் தொழிலாய்வும் என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. நா. சாந்தன் வழங்க கருத்துரையை திரு. எம். இராசநாயகம் ஆற்றுகின்றார். "தேசியமும் தொன்மைக்கான வேட்கையும்" என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. த. ஶ்ரீபிரகாஸ் வழங்க கருத்துரையை திரு, க. தணிகாசலம் அவர்கள் ஆற்றுகின்றார். இறுதியில் "அவசரம்" என்ற ஓரங்க நாடகத்தினை  திரு. த. கில்மன் அவர்கள் வழங்க திர...

புதிய வரவாய்

படம்
புதிய வரவாய் தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக  வந்துள்ள “இப்படியும்…” கவிதைத் தொகுப்பு  இன்று (16.12.2012) மாலை 3.30 மணிக்கு புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. அறிமுக உரையை தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களும் நயப்புரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். வாழ்த்துரையை இலங்கை வங்கி அச்சுவேலி கிளையின் முகாமையாளர் ரி. புவனேந்திரன் நிகழ்த்தவுள்ளார்.  புத்தகத்தில் இடம்பெற்ற கவிதைகளை கிராமத்து சிறார் உரைக்கவுள்ளனர். இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் அழ. பகீரதன் வழங்கவுள்ளார்.

இப்படியும்… நூல்வெளியீட்டு விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாணப் பேரவையின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி கிராமத்தில் புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தினரால் அழ பகீரதனின் இப்படியும்.. கவிதைத்தொகுப்பு வெளியீடுவிழா எதிர்வரும் 16.12.2012 இல் நடாத்தப்பட இருக்கின்றது. இந்நூலானது பேரவையின் நூற்றுப் பதன்நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் அறிமுக அரங்கு பேரவையினால் எதிர்வரும் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் சங்கானை இலங்கை வங்கி மேல்மாடியில் உள்ள மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இவை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். புத்தூர் வெளியீட்டுவிழா விபரம் வருமாறு….. இப்படியும்… கவிதை நூல் வெளியீடு இடம் : கலைமதி மக்கள் மண்டபம், புத்தூர் மேற்கு, புத்தூர் காலம் : 16.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி தலைமை: திரு. த. ஶ்ரீபிரகாஸ் வரவேற்புரை: திரு. செ. ரஞ்சித்குமார் தலைவர், கலைமதி விளையாட்டுக் கழகம் நூல் அறிமுக உரை: திரு. க. தணிகாசலம் தாயகம் சஞ்சிகை ஆசிரியர் நயப்புரை: திரு. சோ. தேவராஜா சட்டத்தரணி வாழ்த்துரை: திரு. ரி. புவனேந்திரன் முகாமையாளர...

தமிழறிஞர் கைலாசபதி நினைவு

படம்
கைலசபதியின் 30வது ஆண்டு நினைவு எதிர்வரும் 09.12.2012 ஞாயிற்றுக்கிழமை..... தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை காலை அமர்வு (காலை 9.15 மணி முதல் 1.00 மணி வரை) தலைமை பேராசிரியர் சி. சிவசேகரம் இலக்கியத்தின் மூலம் வரலாற்றை அறிதல் ஆய்வுரை: திரு. சபா. தனுஜன் கருத்துரை: திரு. க. இரகுபரன் பேச்சுமொழியும் செம்மொழியும் ஆய்வுரை: திரு. மை. பன்னீர்ச்செல்வம் கருத்துரை: திருமதி. ம.சு. தேவகௌரி தேசியவாதமும் தொன்மைக்கான வேட்கையும் ஆய்வுரை: திரு. த. ஸ்ரீபிரகாஸ் கருத்துரை: திரு. ஜெ. சற்குருநாதன் சமயச் சார்பின்மையும் வழிபாட்டுச் சுதந்திரமும் ஆய்வுரை: திரு. ப. மகேந்திரன் கருத்துரை: திரு. வீ. தனபாலசிங்கம் மாறிக்கொண்டிருக்கும் மரபு ஆய்வுரை: திரு. ச. சத்தியதேவன் கருத்துரை: திரு. சோ. தேவராஜா மதிய உணவு இடைவேளை (மதிய உணவு வழங்கப்படும்) (1.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை) -------------------------- -------------------------- -------------- மாலை அமர்வு (2.00 மணி முதல் 5.00 மணி வரை) தலைமை பேராசிரியர் சி. தில்லைநாதன் தி...