இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யார் கேட்டார்கள்

யார் கேட்டார்கள் இரண்டாயிரத்து முப்பத்தொன்றின் ஓர் வைகறைப் பொழுதில் கேட்கின்றீர் ஊரில் யாரும் இல்லையா? தேர் இழுக்கவும் சாமி வாகனத்தில் இருத்திக் காவ‍வும் சனம் இல்லையாம் கேள்வி மேல் கேள்வி கோயிலில் பூசை பார்க்கவும் ஆட்கள் இன்றி அலறும் ஒலிபெருக்கியில் அந்தணர் குரல் மேவிட சென்றங்கு பார்த்தால் ஐந்தோ ஆறோ பேரே அங்கிருந்து வணங்குகிறாராம் எங்கட சனத்துக்குக் கோயிலுக்குப் போறதவிடத் தோதான வேறென்ன பொழுதுபோக்கு தொலைபேசியில் கேட்கிறீர் நீவிரும் நாமும் சிறுபராயமதில் இராத் திருவிழாவில் நித்திரை விழித்துச் சின்னமேளமும் பெரியமேளமும் பார்த்த அந்தக் காலத்திலேயே ஊர் இருக்கும் எனும் நினைப்பா உமக்கு? போர் மூண்ட காலமும் போய் ஆண்டு இருபதுக்கு மேல் ஆச்சு தேர் ஒன்றே எம் இலக்கெண்டு மாறுமெண்டு ஆர் கண்டது அன்று பைரவரும் தேர் ஏறக் காலம் வாச்சுதெனக் காசனுப்பி வைச்சீர் சிறுவர் சிறுமியர் கூடிக் கெந்திப்பிடித்த வான் பார்த்த உள்வீதி வாய்ப்பான கூரையுடன் வண்ணமிகு சித்திரச் சுவர் நீள மாபிள் தரை ஜொலிக்கக் கோபுரம் மேவிடப் பெருங்கதவம் வாசலில்... யார் செல்வார் உள்ளே தேர் ஓடும் வீதிக்காய் அறம் கற்ற மண்டபமும் அவதிக்குள...

நாம்

நாம் அழ. பகீரதன் வாள் வீச்சின் வன்மையில் ஆள் பூமியின் பரப்பை விரிவுபடுத்தலில் வீரம் காட்டிய தொல் மறவர் குடியெனப் பிதற்றியே வேற்றுநாட்டவரை அடிமையாய் கொண்டதனையும் வேற்றுநாட்டுப் பெண்டிரைக் கொண்டதனையும் வேற்று நாட்டு வளங்களைக் கொள்ளைகொண்டதனையும் பெருமையெனச் சாற்றி யாவரும் கேளிர் என நேர்நெறியில் பகுத்துண்டு பல்லுயிரோம்பிய பண்டைப் பழமையைக் குலைப்பீரோ ? உலகெங்கும் நிகழ்ந்த யுத்தங்களிலும் போர்களிலும் சண்டைகளிலும் ச‍ச்சரவுகளிலும் கலவரத்திலும் கொந்தளிப்பிலும் குண்டடிபட்டு மாண்டவரின் சோதர‍ர் நாமன்றோ ?

ஆள்மாற்றம் கோருகிறது

ஆள்மாற்றம் கோருகிறது அழ. பகீரதன் தாமே தமிழ்த் தேசியம் என மொழியும் வெள்ளாளியம் ஆள்மாற்றம் கோருகிறது. உலகெங்கும் சென்று தமது நலன் காக்கத் தமிழ்த் தேசியம் க‍க்கும் சைவ வெள்ளாளியம் கோயிலில் உள்சென்று வழிபட தேர் வடம் பிடிக்க சாமி காவத் தோள்கொடுக்க பஞ்சமர்க்கு மறுக்கின்றது. தாழ்த்தப்பட்டோரைச் சமநிலையில் பேணுதற்குக் கிறித்தவ வெள்ளாளியம் தனித் தேவாலயமென முன்மொழிகின்றது. உழைப்பவர்க்குச் சத்துணவான மாட்டுக்கறி மறுக்கும் இந்துத்துவ வெறியாய் வெள்ளாளியம் மேல்கிளம்புகிறது. உழைக்கும் மக்கள் தாமெழ வேண்டாமென ஈய்கின்ற விருத்தியில் சுருட்டியது போகப் பெறுவீர் எனப் பேரங்கள் பேசிடும் தேசியக் கட்சிகளொடு ஐக்கியமான வெள்ளாளியம். முற்போக்குத் தமிழ்த் தேசியம் நோக்கி மாற்று அரசியலை மக்கள் வேண்டிநிற்க வெள்ளாளியமோ ஆண்டபரம்பரையில் ஆள்மாற்றம் கோருகிறது.

இலங்கையன் என

இலங்கையன் என... அழ.பகீரதன் தமிழர் தேசிய இனமெனத் தம்மை உணர்ந்து நிலைநிறுத்த சுயநிர்ணயம் இருக்குமெனில் முஸ்லிம் இனம் தேசிய இனமென யாவரும் ஏற்றிடக் காலம் கனியுமெனில் மலையகத் தமிழர் இனமென ஏற்றிட , இந்நாட்டின் முதுகெலும்பாய் சம ஊதியம் பெறும் காலம் அமைந்திடக் கூடுமெனில் சிங்கள மக்கள் மனங்களைச் சிறுமைப் படுத்த இனவாதம் க‍க்குபவர் தேர‍ர் ஆயினும் ஓராத அரசொன்றை மதச்சார்பற்றுத் தேர்வர் எனில் கூட்டாட்சியில் சிங்களர் தமிழர் முஸ்லிம் மலையகத் தமிழர் சுயநிர்ணயம் ஏற்றிட இலங்கைத் தீவு ஒன்றியம் ஆயின் நானும் எழுவேன் இலங்கையன் என!

மனமாற்றம் வந்திடுமோ?

இப்படி இருப்பதால் தான் இப்படி நிகழ்கின்றன எனில்  எப்படி? எப்படி..?  ஆணியம் பெண்ணை இழிவுபடுத்த வேணியம் கொண்டு இருப்பதெனில் எப்படி? எப்படி...? சினிமா, சித்திரம், பத்திரிகை இணையம் எனத் தொடர்ந்து பெண்ணை  அரை நிர்வாணமாக்கி இரசனைக்காய் காட்டுவரெனில் ஆண்கள் பெண்நிலை புரிந்து எண்ணத்தில் கொள்வரோ மனமாற்றம் வந்திடுமோ? இன்றெம் இளையவர் போக்கு பிழையெனில் இத்தவறுகள் நிகழும் வண்ணம் இவர்கள் நினைப்பினை இனியும் வழிவழியாய் வந்த பெண்நிலைச்சித்தரிப்பே வழிப்படுத்திடுமோ?

தமிழ் இயங்கிடில்!

தமிழ் என்றோர் மொழி தனியே மாந்த மொழி என எண்ணிடேன் தமிழ் உயர்வென்றோதியே வாழ்ந்திடில் மாந்தர் உயர்ந்திடுவர் எனக்கருதேன் தமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய் மாற்றுமொழி பேசுவோர் என் சோதரர் எனக் கொண்டாட நான் மறுக்கிலேன் தமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை தமிழரிலை என்று செப்புவாரை தூற்றிட தமிழ் என் தேசம் எங்கும் வாழ் சாதாரணர் மொழியெனும் மகிழ்வில் பூரித்திடுகின்ற என் இதயம் தமிழ் அந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட எங்கும் எதிலும் என்றும் எப்பொழுதும் தமிழ் இயங்கிடில் தரணியில் செறிவே!

புதுப் பயணமதில்..

போரில் கொள்ளைகள் என்றும் நடக்கும் போர் கொள்ளைக்காகவும் நடக்கலாம் போர் போரிற்காகவும் நிகழ்த்தலாம்  சுரண்டலும் ஊழலும்  சுத்துமாத்து பண்ணலும் அரண்டு ஓடிவிடுமோ  மிரழ்வரோ  ஆட்சி ருசியில்  பாராளுமன்ற  அரசியல் பண்ணும் பேர்வழிகள்.. தானே மாறும் என நினைத்திடில்  முடிவுறுமோ? பாராளுமன்ற வழிமுறைகள் பலித்திடுமோ போராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு! போரிட்டு தோற்பதுவும்  வெல்வதும் நிகழும் போர் போரை மேவும்  போர் போரால் வெல்லும் போர் அழிவில் பூரித்து மகிழ்வர் ஆழ்பவர்... எனில் எழுவரோ ஏதிலிகள் நனிபேருவகை அடைந்திட நலிந்தவர்க்கும் ஏது உண்டோ? சலித்திடவோ ஓட்டுபோட்டே... நாளை வேளைவரும்  அரசியல் நிலை உணர்ந்த மக்கள் திரள் வெகுண்டெழும்  புதுப் பயணமதில் வெகுஜனப் போராட்டப் பாதையதில் மக்கள் அதிகாரம் பெற்றிடில்  மாற்றம் நிகழுமே! 

படுத்திடுமினி கொடுங்கோல்!

ஏனந்த நாட்கள் மீண்டும் வருகின்றன வானத்தில் கூக்குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன கானகத்தில் ஒப்பாரிகள் மீண்டும் கேட்கின்றன! கொத்துக்கொத்தாய் மனிதர் அழிந்திடப் பொத்தம்பொதுவாய் மனிதம் அழிந்தது சாத்தியமாகாதென சரித்திரம் எழுதியது! விடுதலைக்கான மார்க்கம் இழந்துநிற்க சடுதியில் நிகழ்ந்தன சதிவலைத் திட்டங்கள் கொடுமைகள் செய்தோர் மாய்ந்தனரில்லை! கொடுமைகள் அரங்கேறத் திட்டமிட்டாரையே விடுதலைக்கு துணைகேட்கும் நிலையாச்சு கேடுசெய்தாரை அண்டிவாழ காலமாச்சோ! இனிஎமக்கு இயலுவன எதுவெனத் தேர்வமோ தனித்தியங்கி தரித்திரம் போக்குவதுவோ சனிமாற்றம் வருமெனத் தான் காப்பதுவோ! ஒடுக்கப்பட்டவர் தேசங்கள் எழுந்திடவென விடுத்திடுவோம் ஒன்றுபட அழைப்புக்கள் படுத்திடுமினி கொடுங்கோல் ஆட்சிகள்! சென்ற வருடத்தில் முகநூலில் பதிவானது செம்மையாக்கத்துடன்

ஆழும் பரம்பரையுடன் கைகோர்த்து...

ஒன்றும் செய்வதற்கு முடியாது முனகிய பொழுதுகள் மறப்பமோ? ஏன் பிறந்தோம் என ஏங்கிய நாட்கள் ஏன் இந்நிலையில் தாழ்ந்தோம் எனத் தவித்த நாட்கள் ஒரு பொழுது நினைத்தோமோ தெரு வெங்கும் மனிதர் உயிர் காக்க ஓடஓட விரட்டவும் சுடவும் குண்டுமாரி பொழியவும் ஓங்கிய குரல்கள் ஓவென கத்தும் கணங்கள் யாரேனும் நினைத்தோமோ பாவப்பட்ட மக்களா அவர்கள் பஞ்சப்பட்ட மக்களோ அவர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆழ நினைத்ததனால் மாண்டனரே... இன்றோ ஆழப்படுவோர் அனாதரவாய் அண்ட வெளி எங்கும் துண்டமாய் கிடக்க... ஆண்டபரம்பரை மீண்டும் எழுகிறது மீழ மீழ ஆழப்படுவோர் ஈய்கின்ற ஓட்டுக்கள் மூலம் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை உலகுக்கு காட்டி உலகை ஆழும் பரம்பரையுடன் கை கோர்த்து மேலும் மேலும் அடிமை மிடிமை நிலையில் மீளாது நாம் இருத்தற்கே! இது சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் எழுதிய கவிதை செம்மையாக்கத்துடன்

உடன்பட்டமோ? கடன்பட்டமோ?

ஏதடா, ஏதடா இந்த உலகம் ஏதடா ஏனினி நாங்க?  ஏனினி நாங்க?   சோலையுமில்லை, ஆலையுமில்லை காடுமில்லைக் களனியுமில்லை பாலைவனம் ஆச்சுது நஞ்சூறிய நம் நிலம்! நீரிற்கு காசு, சுவாசிக்கும் காற்றுக்கும் காசெனில் ஏழையர் பணமே போகுமே போகுமே பல்தேசிய கம்பனிப் பைகளும் நிறையுமே! ஆண்டவன் அருளை வேண்டி வர என்றே நாள்பல நமக்கு நாள்பல நமக்கு அட்சய திதியும் வளை காப்பு விரதமும் தீபாவளியும் கோயில் திருவிழாவும் கொண்டாடிட கொண்டாடிட போச்சு! பண்டம் பலவும் வேண்டிட வேண்டிட திண்டாட்டம் பணத்திற்கு வந்ததெனில் கடன்படு கடன்படு என காட்டினர் உடன்படு உடன்படு என பத்திரம் கேட்டனர்! விட்டு விடுதலைஆவதற்கு வழியிலை. பொல்லா நிலை போயகலப் பாத்திருக்க நல்வாழ்வு வருமென நாலு திக்கும் வரவேற்க வரி பெருக வரி பெருக வசூலாகும் வசூலாகும் பரிவும் இல்லை பண்பும் இல்லை தெரிவு உண்டு தேர்தல் உண்டு தேயத்து மக்களுக்கு தேர்வதற்கு வழியுமுண்டு பல் தேசிய கம்பனிகள் நல் உற்பத்தி செய்திடுவர் பெறுவதற்கு ஏதுமில்லை தடைகள் இங்கு பல்கிப் பெருகிட மூலதனம் அவர்க்காகும் பட்டினி கிடந்தேனும் நுகர்வுக்காய் நாமிழப்போம் தவணைக் கட்டணத்தில் தரம்மிக்க பொருட்கள் பூச்ச...

விடை கிடையா வினாக்களோடு!

மனம் இறுகிய கணங்களில் மலருமோ எங்கள் இதயம்? மடிந்தவர் முகங்கள் எங்கள் மனவெளி எங்கனும் வீழ்ந்தவர் நினைவினைச்  சுமந்திடும் கணங்கள் ரணங்களாய் நினைவுகள் நிகழ்ந்தன எல்லாம் நிதமும் நினைவுகளாய் வதைக்கும் நிமிடங்கள் நிம்மதி குலைக்கும் கேள்விகள் இனி... இழப்பதற்கு எமக்கு இருப்பது எதுவோ? கனிந்திடுமோ எனும் கனவினில் எமக்குள் ஏன் கூவல்கள்... அடுத்துக் கெடுத்தவர் பக்கம் பாப்பர் என்றும் தொடுத்து போருக்கு துணைநின்றவர் துயர் தீர்ப்பரென்றோ தொலை தூரத் தேடல்கள்... விரிந்து கிடக்கும் பூமிப் பந்தில் விடை கிடையா வினாக்களோடு நடையினைத் தொடர்ந்திடும் நடைப் பிணங்களாய் நாங்கள்... மானுடம் தளைக்கும் பாதையில் ஏனுடன்பட இன்னும் தயக்கம்?

வேண்டும் நினைவுகள்

வேண்டாம் என ஒதுக்கிலும் மீண்டும் மீண்டும் மனக்கதவை தட்டும் நினைவுகள்., கொண்டாடிக் களிக்க  முடியுமா இன்று? நாளைய கருமத்தை கருதி நித்திரை வேண்டியே என் கண்கள் தவமிருப்பினும் நினைவுகள்  தாண்டி என் மனமதில் வேண்டுதல் செய்வது ஏன்? கால ஓட்டத்தில் கரைந்துபோன இளைமை போல் இழந்து போவதில்லையே நினைவுகள், இன்று நிலைப்பன  இன்பம் இலையெனில்!

தியாகத்திற்கோர் சிறப்பு

தியாகம் போற்றுதற்குரியது, தியாகம் ஏற்றுதற்குரியது! மயானம் ஒன்றில் உறங்குதற்குதானா தியாகிகள் ஆயினீர், மயானம் ஒன்றேதானா உங்கள் இலக்கு? வானில் ஒளியாய் ஒளிர்ந்து ஏன் மண்ணில் வாழும் மனிதர்க்கு மகிமைகள் செய்திட முயன்றிடீர்! எண்ணில் எமக்கு இயலுவது எண்ணரிய பணிகள்... நீவிர் ஏனோ  மயானத்தில் துயில்தற்காய் மண்பரப்பை வேண்டுவீர்? வேண்டாம்! இன்னுயிரை தியாகம் செய்த உங்களின் பெயரால் வன்னியில் உள்ள உங்கள்  கனவுகளின் மாந்தர் எழுந்திட வாழ்ந்திட,  எழுச்சியுற மாண்புற, இயன்றன ஏதும் செய்திட கேளும்  தியாகத்திற்கோர் சிறப்பு அஃதே என மொழிவீர்!

அன்னையை நினைந்து..

நிலவுக்குத்தெரியும் நின் அன்பு நிலவின் குளிர்மையின் உன் அரவணைப்பு நிலவை எனக்கு காட்டி நிதம் கதைகள் சொன்ன அந்தக் காலம் உலவும் ஞாயிற்றொளியில் நிலவு ஒளிர்வதாய் நீ எனக்குச் சொல்லித்தந்த காலம் மலரும் பருவத்தை எனக்கு மனதில் பதித்திட சொன்ன காலம் பெண்மையின் கருத்தை எனக்குள் பொங்கிடச் செய்த காலம் பெண் படும் துயர்களை எனக்குள் எண்ணிட நீ வைத்த காலம் பெண் இன்னல்களை எனக்குள் விதைத்துச் சென்ற காலம் எழுத எனக்குள் சிந்தனையை எழுப்பி விட்ட அந்தக் காலம்... காலம் மீளாதோ என இந்தக் காலம் ஏங்கித் தவிக்கின்றேன். இயலுமோ உனது காலத்துள் நான் சென்றிட இயலுமோ உனக்குள் நான் கரைந்துவிட! நீ இல்லாத இந்த நாட்களுள் நான் என்னையே இழந்துவிட அன்னையே உன்னைத் தேடியே நாட்களின் நகர்வுகள்! இன்று  எனது அன்னை சிவகெங்கா பிறந்த தினம்

ஒருமித்து...

முற்றம் சீமெந்துத் தரையாய் சிலிர்க்கும் தெற்றத் தெளிவாய் தெரியும் வானம் கற்றை வீசுடும் ஞாயிறு ஒளிர்வில் அற்றைத் திங்கள் அழகிய பூக்கள்... மற்றென்ன வேண்டும் மனம் இலயிப்பில்! சற்றுத் தொலைவில் குப்பை கூழங்கள் நாற்றம் வீசுடும் தெருக்களின் பக்கம் கற்றுணர்ந்தமோ ஒருமித்த பணிகளை பற்றுக் கொண்டோமோ சுத்தம் பேணுதலில்!

அடுத்தவள் பற்றி

அடுத்தவள் பற்றி அடுத்தவளிற்குள் நுழை துருவித் துருவி அவளை ஆராய்! அவளது நினைப்புகளை அந்தரங்கங்களை அவாக்களை எதிர்பார்ப்புகளை எதிர் உணர்வை எல்லாவற்றையும் விமர்சி தேடித்திரிந்து நாலுபேருக்குச் சொல்லு! கவலைப்படு அவள் கெட்டுப்போவதாய் அழிவதாய் அவளால் சமூகம் கெடுவதாய் உரத்துச் சொல்லு நாலுபேர் தலையாட்ட! தவறியும் உன்னைப் பற்றி உனது அந்தரங்கம் உனது அவாக்கள் எதிர் பார்ப்புகள் எதிர் உணர்வு எது பற்றியும் விமர்சிக்காதே யாருக்கும் சொல்லாதே அடுத்தவளால் மட்டுமே சமூகம் கெடும் ஆதலால் அவளைப் பற்றி அலசு! அப்படியே இரு கவிதைத்தொகுப்பிலிருந்து அழ பகீரதன்

எவர்

எவர் நீ எனக்கு நான் உனக்கென நினைத்தோமெனில் இடையில் நம்மை இழுத்தெறிந்து பிரிக்க முயல்வது எவர்! நான் உன்னில் நீ என்னில் இறுகிப் போன பின்பும் ஆவேசமாய் எமக்கு ஆக்கினைகள் செய்து தூக்கி எம்மைத் தூர வீசியெறிய முயல்வ தெவர்! ஒன்றை நினைந்து ஒன்றாய் கிடந்து ஒன்றிய பின்பும் நீடிக்க விடோமென நீட்டி முழக்கி நீண்டுழக்கி யெமை துண்டு துண்டாக்க முயல்வ தெவர்! நிஜமுகம் மறைத்து விதவித முகமூடிகள் அணிந்து பலவித நியாயம் கற்பிக்கும் வழிவழி வந்த சுயம் இழந்த அடிவருடிகளோ? 1994 அப்படியே இரு கவிதைத் தொகுப்பிலிருந்து

ஆண்டைகளின் அடிமைகளாய்

இய பேசிக்குள் இயலுமாகின்ற இளமைகள் கரையும் நாட்கள் தயவை நாடும் மனங்களைத் தவிர்த்திட வலை விரிப்பு சேய்மையில் கண்டவர் யாரும் நட்பெனக் கொள்ளாக் காலம் உட்பொதிந்து இயபேசிக்குள் பொத்தானுக்குள் சினேகம் நாடத் தூயவை என எதுவுமிலையென காய்கின்ற மனதொடு இருப்பு சூழ்ச்சிக்குள்  மாய்ந்த நிலையெனில் வேவுபார்த்திட நம்மை நாமே காட்டிக் கொடுத்திட கற்றோம் எனில் மதிக்கின்ற வகையினில் யார்க்கும் பொறுப்பில்லா நிலையிலென்ன விதைப்பு சேதிகள் பெறுக்கிட நாட்கள் சேதிகளாய் விரிந்திட கூடுமெனில் சேதிகளாய் ஆவதில் தான் தவிப்பு சேதியே சேதியை தேடிடத் தேவைகள் சேதியை நோக்கியே யாரிடம் யாருக்காய் யாரொடு யாராகி யாரொடு யார் மோதி யாருக்காய் தேசமென யாருக்கும் ஓர் தேசமென தேசமே விமோசனமென தேசத்தை தேசம் மேவ தேசியம் தேடி குறுந்தேசியம் பேசி தேசங்கள் கடந்த தேசியம் காண ஓர் நாடு இரு தேசமென ஓர் மதத்திற்கே தேசமென மதமே ஆழுமென ஒடுக்கப்பட்ட சாதிகளின் தேசியமென விடுக்கப்படுகின்ற தாள்களில் எங்கும் பாசம் நாசம் பண்பு நாசம் உறவு நாசம் உயிர்மை நாசம் வேசம் கூடும் பொய்மை மேவும் ...