உடன்பட்டமோ? கடன்பட்டமோ?

ஏதடா, ஏதடா இந்த உலகம் ஏதடா
ஏனினி நாங்க? ஏனினி நாங்க? 
சோலையுமில்லை, ஆலையுமில்லை
காடுமில்லைக் களனியுமில்லை
பாலைவனம் ஆச்சுது நஞ்சூறிய நம் நிலம்!
நீரிற்கு காசு, சுவாசிக்கும் காற்றுக்கும் காசெனில்
ஏழையர் பணமே போகுமே போகுமே
பல்தேசிய கம்பனிப் பைகளும் நிறையுமே!
ஆண்டவன் அருளை வேண்டி வர என்றே
நாள்பல நமக்கு நாள்பல நமக்கு
அட்சய திதியும் வளை காப்பு விரதமும்
தீபாவளியும் கோயில் திருவிழாவும்
கொண்டாடிட கொண்டாடிட போச்சு!
பண்டம் பலவும் வேண்டிட வேண்டிட
திண்டாட்டம் பணத்திற்கு வந்ததெனில்
கடன்படு கடன்படு என காட்டினர்
உடன்படு உடன்படு என பத்திரம் கேட்டனர்!
விட்டு விடுதலைஆவதற்கு வழியிலை.
பொல்லா நிலை போயகலப் பாத்திருக்க
நல்வாழ்வு வருமென நாலு திக்கும் வரவேற்க
வரி பெருக வரி பெருக வசூலாகும் வசூலாகும்
பரிவும் இல்லை பண்பும் இல்லை
தெரிவு உண்டு தேர்தல் உண்டு
தேயத்து மக்களுக்கு தேர்வதற்கு வழியுமுண்டு
பல் தேசிய கம்பனிகள் நல் உற்பத்தி செய்திடுவர்
பெறுவதற்கு ஏதுமில்லை தடைகள் இங்கு
பல்கிப் பெருகிட மூலதனம் அவர்க்காகும்
பட்டினி கிடந்தேனும் நுகர்வுக்காய் நாமிழப்போம்
தவணைக் கட்டணத்தில் தரம்மிக்க பொருட்கள்
பூச்சிய வட்டியில் ஆச்சுது எமக்கிது என்று
நின்றிடுவீர் இதன் முடிவில் இருப்பு பூச்சியமாக
பயன் பெறுவர் பல்தேசிய கம்பனிகள்
வியன் உலகத்து நிலை இதுவாய்
விந்தையிது அறியீரோ சொத்தென ஏதுமிலா
கடனாளியாய் ஆக்கியே சொந்த நிலமிழக்கவே
உடன்பட்ட நிலையறியீரோ உயிர் விடப் போவதுவோ
அட நாளை நல்லரசுக்காய் காவடி  எடுத்திட
வீடு வருமோ விளைபொருளும் நமக்காகுமோ?
கடனளியுமோ கவலை தீருமோ, தீர்வாகுமோ?

கருத்துகள்

Yarlpavanan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கருப்பொருளை அலசி உள்ளீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்