இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுமலர்ச்சி மன்றம் புதிய நிர்வாக செயற்பாடுகள்

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு அதன் கீழ் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வமுற இயங்கிவருகின்றார்கள். மன்ற மைதானத்தில் பின்பகுதியில் முளைத்திருந்த பற்றைகளை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் சு.யாதவன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் மன்றத்தின் மாதாந்த மீண்டெழும் செலவீனங்களாக தற்சமயம் ,ரூ 20000 உள்ளதெனவும் அதனை மன்ற உழைக்கும் அங்கத்தவர்கள் மாதாந்த உதவு தொகையாக ரூ 1000/= செலுத்தவேண்டும் எனவும் மேலும் மன்ற அபிவிருத்திதிட்டங்கள் நிறைவு பெறும்போது இம் மீண்டெழும் செலவீனங்கள் ரூ 100000 வரையில் அதிகரிக்கும் எனவும் இந்த செலவீனங்களை ஈடு செய்ய மன்றத்தின் உள்ளூர் புலம்பெயர் அங்கத்தவர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் ரூ 1000 மாதாந்தம் உதவுதொகையாக வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார், முன்பள்ளியும் உள்ளக அரங்கும் யூலை மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அதனைத் தொடர்ந்து கோயில் முன்னகர்த்தப்பட்டு அமைக்கப்படும் எனவும் அதனுடன் இணைந்ததாக நீர்த்தொட்டியும் திறந்த வெளியரங்கும் அமைக்கப்படும் எனவும் ஒவ்வொர...

மாணவர்களின் கல்வியில்...

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இன்றைய தினம் எனது ஊரில் உள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக வரச்சொல்லி சென்றேன். மாணவர்களுக்கான மன்றம் உருவாக்கும் நோக்குடன் அந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது. அங்கு பல வயதினரான மாணவர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கற்பதற்கான சூழல் இருப்பதில்லை என குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. உண்மைதான் அயல் வீடுகளில் வானொலிச் சத்தம் அயல் கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் வீடுகளிற்கிடையில் இடம்பெறும் மோதலும் சண்டையும் குடிவெறியும் கும்மாளமும் மாணவர் கல்வியில் ஊக்கத்தை கெடுப்பனவாகவே இருக்கின்றன. பலவீடுகளில் தொலைக்காட்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கி தடையாக இருக்கின்றன. மாணவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார்கள். இவற்றை திருத்தி மக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவார்களா! இந்த மாணவர் மன்றம் ஆக்கமுடன் செயற்பட்டு இக்குறைபாடுகளை களைந்து மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வழி ஏற்படுத்துகின்றதா என பொறுத்திருந்...

எனது வயதினை ஒத்த அப்பாக்களின் பிள்ளைகளுக்கு

இலங்கை பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் குப்பனின் பையனும் ,சுப்பனின் பொண்ணும் ஏன் என் தந்தை சமூகத்தினால் ஒடுக்கப் படுகிறான் என்று என்றாவது சிந்தித்தீர்களா? சாதிக் கொடுமையால் ஒரு கிராமமே எரியூட்டப்பட்டதே அதற்காக போராடினீர்களா ? இன்றைய பொருளாதார வறுமை நிலை ஏன் ஏற்படுகிறது என்று கவலைப்பட்டீர்களா?அதற்கெதிராக ஒருங்கிணைக்கும் உணர்வாளர்களிடம் தேடிச் சென்றிருக்கிறீர்களா?ஏதாவது மாணவர் போராட்டம் தான் செய்து இருப்பீர்களா? அத்தகைய உணர்வாளர்களிடம் "மீடியா" வெளிச்சம் போட்டுக்காட்ட பணம் இல்லை.தேர்தலில் வெற்றி ஈட்டுவர்காக எவ்வளவு பணமும் கொட்டுவதற்கு தி மு க -அ தி மு க தயாராக உள்ளது .புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்தின் ஒருபகுதியை நெடுமாறனும்,வைக்கோவும்,சீமானு ம் சுவரொட்டிகளும்,கொடிக்களுமாக காட்டி,உங்கள் கல்வியைக் காவு வாங்கிறார்கள் தனியார் கல்லூரிகளில் உம்மை இணைத்துக் கொள்ள உம் அப்பனும் ஆத்தாவும் படும்பாடு எத்தகையது என்பது பற்றி என்றாவது சிந்தித்தார்களா?இலண்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். (  http://www.youtube.com/ ...