தமிழ் இயங்கிடில்!

தமிழ் என்றோர் மொழி தனியே
மாந்த மொழி என எண்ணிடேன்
தமிழ் உயர்வென்றோதியே வாழ்ந்திடில்
மாந்தர் உயர்ந்திடுவர் எனக்கருதேன்
தமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய்
மாற்றுமொழி பேசுவோர் என் சோதரர்
எனக் கொண்டாட நான் மறுக்கிலேன்

தமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை
தமிழரிலை என்று செப்புவாரை தூற்றிட
தமிழ் என் தேசம் எங்கும் வாழ்
சாதாரணர் மொழியெனும் மகிழ்வில்
பூரித்திடுகின்ற என் இதயம் தமிழ்
அந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட

எங்கும் எதிலும் என்றும் எப்பொழுதும்
தமிழ் இயங்கிடில் தரணியில் செறிவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்