விடை கிடையா வினாக்களோடு!

மனம் இறுகிய கணங்களில்
மலருமோ எங்கள் இதயம்?
மடிந்தவர் முகங்கள் எங்கள்
மனவெளி எங்கனும்
வீழ்ந்தவர் நினைவினைச் 
சுமந்திடும் கணங்கள்
ரணங்களாய் நினைவுகள்
நிகழ்ந்தன எல்லாம் நிதமும்
நினைவுகளாய் வதைக்கும் நிமிடங்கள்
நிம்மதி குலைக்கும் கேள்விகள்
இனி... இழப்பதற்கு எமக்கு
இருப்பது எதுவோ?
கனிந்திடுமோ எனும் கனவினில்
எமக்குள் ஏன் கூவல்கள்...
அடுத்துக் கெடுத்தவர்
பக்கம் பாப்பர் என்றும்
தொடுத்து போருக்கு
துணைநின்றவர்
துயர் தீர்ப்பரென்றோ
தொலை தூரத் தேடல்கள்...
விரிந்து கிடக்கும்
பூமிப் பந்தில்

விடை கிடையா வினாக்களோடு
நடையினைத் தொடர்ந்திடும்
நடைப் பிணங்களாய் நாங்கள்...
மானுடம் தளைக்கும் பாதையில்
ஏனுடன்பட இன்னும் தயக்கம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

நாம்

இலங்கையன் என