இடுகைகள்

குறுங்கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிவரும் காலங்கள்

மீண்டுமொரு முறை மீள நினைக்கின்றேன் ஆண்டு முப்பது ஆயிற்று ஆண்டவரொடு கூடி மாநிலக் கல்லூரியில் மலர்ந்த இளமையில் மாணவராய் நடந்த மலரும் நினைவுகள் அருள் நடராஜனின் அருமையான பேச்சிலும் மகாவிஷ்ணுவின் தினமும் கூறும் புதுக் கவிதையிலும் ஆண்டவர் எந்தன் காதோரம் கூறும் கைக்கூக் கவிதைகளிலும் கருணாநிதியின் கீழைக் காற்றுத் தந்த மரபுக் கவிதையின் உரம் மிக்க வரிகளிலும் தோய்ந்த எனது நாட்கள் மீள ஒருதடவை நினைக்கின்றேன் இரவி சங்கர் செங்குட்டுவன் சீனிவாசன் பாபுவென எனக்கிருந்த இனிய அந்த நட்பு வட்டங்கள் இனிநான் நாடி தேடி அடைந்திட என் காலமும் போதுமோ? அவரவர் குடும்பம் அவரவர் தொழில்கள் அவரவர் தேடல்கள் என நகர்ந்த ஆண்டுகள்... என் மனவெளி எங்கும் அந்த மூன்றாண்டுகளின் அனுபவ பதிவுகளோடு... இனிவரும் காலங்கள் தமிழக மண்ணில் என்பாதம் படியும். அழ பகீரதன்

யாபேரும் யாவர்க்கும்...

வலிமை பெறு அரசமைத்து தாமுயர்ந்து ஓரிருவர் சந்ததியே நிலமளந்து ஆண்டனுபவித்து மாந்தரை மிடிமை நிலைக்காளாக்கி ஆழ்கின்ற .உலகோ நீளும்? தொழிலாளர் நலன் வேண்டி தொய்வில்லா நெறியொன்றில் தொழிலாளர் தலைமையுற எழிற்சியுறு எம்மக்கள் எழுந்து நிலைமாற்றும் கொள்கையில் வளமெல்லாம் பொதுமை ஆக்கிடவே யாபேரும் யாவர்க்கும் துணையாக ஒருவர் எல்லோருக்குமாய் எல்லோரும் ஒருவருக்காய் நல்நெறியில் கூடுவரேல் செல்வமது சேருமே மிடிமையில் வீழ்ந்தார்க்கும்!

புரிந்திட வைப்போம்

நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம் நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர் சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள் சங்கடப் படாது மொழியினை கற்போம் புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம் புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!

புரிந்திட வைப்போம்

நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம் நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர் சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள் சங்கடப் படாது மொழியினை கற்போம் புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம் புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!

விளக்கம் புரிந்திடில்!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் என்னில் நீயும் உன்னில் நானும் என்னால் நீயும் உன்னால் நானும் என்னொடு நீயும் உன்னொடு நானும் கலப்பது நிசமெனில் விலக்கென ஏனெமக்குள் சாதியம் இனத்துவம் மதம்... இல்லாப்  பிரிவினைகள் எதற்கெமக்குள்? விதைத்தெது எவரோ! விளக்கம் புரிந்திடில் விலக்குவோம் பிரிவினைகள்.. கலந்திடப் புரிதல்கள்!

இயலும், எண்ணுவமோ?

பெண்ணின விடுதலையைப் பெற்றுத் தரவென்றோ கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர் பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில் விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும் பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்! எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும்,  எண்ணுவமோ?

பகுத்து அறிந்திடில்...

தெளிவு பெறுவோம் தேறுவோம் ஒளிபெறுவோம் ஒளிவு மறைவின்றி இயல்பாய் பேசிடுவோம் பண்பு பெறுவோம் பாலிய மங்கையரை பேணிடவே! பற்றுக் கொள்வோம் நல்நெறி நலம் காப்பதிலே! மோகம் காமம் ஒப்பிய திரை மறை நிலை ஒழிய பள்ளி மாணவர் பண்பு நிலை காத்திடவே பகுத்து அறிந்திடில் பாலியல் கல்வி வேண்டுமென்பேன் வகுத்துக் கொடுப்பதற்கு இன்னுமேன் தயக்கம்?

உலகப்பன் விருப்பின்படி...!

முன்னோக்கி நகர் என்றால் என்னோக்கு பிழை என்பார் பல்லினம் வாழ்தேசம் இதுவென நல்நோக்கில் சொன்னால் செல்லாக் காசாய் கருதுகின்றார் செருக்கோடு செப்புகின்றார் தருவார் எனத்தான் இன்னமும் தலை எடுக்கின்ற இனமானம் உருமாறி அருகேறி அலறுவதால் உலக இயல்பு இதமாகிடுமோ உலகேன் இயற்றும் எமக்காய்...? உறவாவர் கோடிக்கதிபதியரோடு உலகது எப்போதும் போலவே உலகப்பன் விருப்பின்படி...!

மண்ணில் மாண்பு!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாண்புகள் பெறலாம் மகிமை பெறும் சொர்க்கமும் மண்ணுலகிலேயே கிட்டும் மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென வேந்தர் என எழுந்து நிற்கும்  முதலாளிய அதிகாரம் ஒழித்து  பாட்டாளிகள் எழுந்து நின்று கூட்டாளி என கூடியவரை இணைத்து சட்ட மறுப்பென கிளர்ந்து சனநாயகத் தேர்தலை ஒழித்து புரட்சிகர மார்க்கத்தில் மக்கள் அதிகாரம் பெற்றிடில் மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!

காரணமின்றியோ?

கொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே சட்டென காலம் மாறிய விந்தை இதுவே இயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென பயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே பயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம் நாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென நாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ வேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ பூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ காரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ?

பிறந்த நாளாம் இன்று!

அன்று பிறந்தது அன்னைக்கு மகிழ்வு இன்று வாழ்த்திடும் உள்ளங்களுக்கு மகிழ்வு நன்று வாழ்ந்திடில் நலம் ஓம்பிட எனக்கும் மகிழ்வு நின்று உலகில் நீடு வாழில் குடும்பம் மகிழ்வு வென்று நின்றிடில் எந்தன் மண்ணுக்கும் மகிழ்வு தோன்றில் புகழெனில் சான்றோர்க்கும் மகிழ்வு

நிலைக்க செயவமே !

தாள் வீச தலை யெடுப்பாரே பலர் கோள் மூட்ட கோஷ்டி கட்டிட வேள் என்றே எழுவர் எங்கும் வாள் வீச்சே பேச்சாச்சு இன்றே பாழ் ஆச்சே பண்பு போச்சே என கொள்கை நின்றார் முறை இடவே இளஞ்செழியன் நீதிபதி நீட்டும் கரங்களை இறுகப் பற்றி நிலைக்க செயவமே அமைதி!

ஏந்திடும் கரங்களுக்குள்...

நீதியென ஒன்று நிலைக்குமென்று யார் சொன்னது சேதியிது புதினமன்று செய்வதற் கொன்றுமில்லை நாடிநிற்க எமக்கே நல்லார் இலையெனில் தேடிநிற்க மானிடர்க்கு மார்க்கம் ஏது கண்டீர் வாடிநிற்கும் மாந்தர்க்கு அறியாமை உள்ளவரை... பாடிப்பரவியே நிற்கும் பண்படா நிலையினில் ஏந்திடும் கரங்களுக்குள் மாற்றத்திற்கான மாற்றுவழி..?

பட்டறிவு பெற்றோமென!

வேளாண்மை வீடு வந்து சேர்ந்திடில் வீடெல்லாம் நிறையுமே மகிழ்வு மலர்ந்திட! பாடான பாடு பட்டுலைந்திட  என்றும் நாடாதே நமக்கென்றும் நயங்கள் சேர்ந்து... சேராதே சிறுபிள்ளை வேளாண்மை சிறந்து தேரோமோ இனியேனும் பட்டறிவு பெற்றோமென ஓர்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தே சேர்ந்தால் ஜகமெங்கும் வியக்குமே நிமிர்ந்து!

அறிவு நிறைந்திட!

மன்றத்து நூலகத்தில் மனதாற இருந்தேன் என்றென்றும் எனக்கிது சொர்க்கம் என்பேன் தொன்று தொட்டு தமிழ் வளர்ந்தவாறு கண்டேன் நன்னெறி நம்மண்ணில் நடந்தவாறு உய்த்தேன் சென்னெறியை சேமமுறச் செய்திடும் என்பேன் இன்புற யார்க்கும் இயலுமாறு இருக்க செய்திடத் தோன்றிடும் போதினில் அன்னை தமிழே! அன்புற யாவர்க்கும் அறிவு நிறைந்திட  என்றும் தாய்மொழிக் கல்வியே திறமென்பேன்!

பகுத்து உணர்ந்திடில்...

பழயன தருவது பயனெனக் கொள்வதோ? பழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர் புதுமை கசந்திடப் பழமை புதுக்குவர் பழமைக்குள் உள்ளன அறிவின்ஆணிவேர் பழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர் பகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே!

சட்டம் இலையேல்?

யாழ் மண்ணே இன்றேனோ இவ்வாறாய் ஆனாய் யார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப யாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ யாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ யாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு  இலையோ யார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல் யாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ யாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்?

குளிர்காற்றும் உட்புக!

வான்முட்ட வளர்ந்த அரச மரம் எங்கே? வாழைமரமும் வளர் வாகையும் எங்கே? தேன்சுவைதரும் மாங்கனி தரு மரம் எங்கே? தென்னை பனை கருவேம்பு தானெங்கே? தேக்கும் பாக்கு தரு கமுகும் எங்கே? வேம்பும் முருங்கையும் தேடற் கரிய செம்பழந்தரு மாதுள செடியும் எங்கே? ஆவலைத்தூண்டும் நாவல் மரம் எங்கே? சுளை சுளையாய் பழந்தரு பலாமரம் எங்கே? விளாத்தியும் இலுப்பையும் போயொழிந்ததும் எங்கே? மரஞ்சூழ் முந்தையர் நிலம் நாலாய் பிரிபட மண்குடிசை இருந்த இடம் மறைந்திட எண்ணரிய மரம் சூழ்ந்த நிலமதில் எத்தனை வீடுகள் எழுந்தன நெருங்கியே... எப்படி குளிர் காற்றும் உட் புக இயலும் சுட்டெரிக்கும் வெயிலைத் தூற்றி ஏதுபயன்?

சேமம் பெறுவமே!

வேல் எழுந்தது வெல்வது உறுதி மேல் கிழம்பும் மேவி உயர்ந்திடும் பொல் லாப்பு போக பொக்கிசம் பெருகும் வல்வினை ஆற்றிட வளம் சேர்க்குமே மல்லுக்கு நிற்பாரை மனந் திருப்புமே கல் என எமக்கு சொல்லி நிற்கும் நல் வாழ்வு நமக்கென தந்திடும் பல் ஆண்டு நமக்கு அருள் தந்திடும் செல் நெறிக்கு துணை நிற்கும் நெல் விளைந்திட சேமம் பெறுவமே

பொதுமை பொங்கிட!

இரவில் ஒளிபரப்பும் இங்கிதம் எங்கும் இயலும் உலகினில் அன்பு நிறையும் கனவு மெய்ப்படும் கருத்து நிலைக்கும் விளக்கம் கிடைக்க விருப்பு வந்திடும் துலக்கம் ஆகிடப் புதுமைகள் நிகழும் நம்மண் இதுவென நமக்குள் பெருமிதம் நாடியன எல்லாம் நல்லன என்றிட தேடியன தருமே ஆனந்தம் என்றுமே! பாடிப் பரவிட பற்பல பண்புகளே பொதுமை பொங்கிட அனந்தம் இனங்களே!