இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகப்பன் விருப்பின்படி...!

முன்னோக்கி நகர் என்றால் என்னோக்கு பிழை என்பார் பல்லினம் வாழ்தேசம் இதுவென நல்நோக்கில் சொன்னால் செல்லாக் காசாய் கருதுகின்றார் செருக்கோடு செப்புகின்றார் தருவார் எனத்தான் இன்னமும் தலை எடுக்கின்ற இனமானம் உருமாறி அருகேறி அலறுவதால் உலக இயல்பு இதமாகிடுமோ உலகேன் இயற்றும் எமக்காய்...? உறவாவர் கோடிக்கதிபதியரோடு உலகது எப்போதும் போலவே உலகப்பன் விருப்பின்படி...!

மனமாற்றம் வந்திடுமோ?

இப்படி இருப்பதால் தான் இப்படி நிகழ்கின்றன எனில்  எப்படி? எப்படி..?  ஆணியம் பெண்ணை இழிவுபடுத்த வேணியம் கொண்டு இருப்பதெனில் எப்படி? எப்படி...? சினிமா, சித்திரம், பத்திரிகை இணையம் எனத் தொடர்ந்து பெண்ணை  அரை நிர்வாணமாக்கி இரசனைக்காய் காட்டுவரெனில் ஆண்கள் பெண்நிலை புரிந்து எண்ணத்தில் கொள்வரோ மனமாற்றம் வந்திடுமோ? இன்றெம் இளையவர் போக்கு பிழையெனில் இத்தவறுகள் நிகழும் வண்ணம் இவர்கள் நினைப்பினை இனியும் வழிவழியாய் வந்த பெண்நிலைச்சித்தரிப்பே வழிப்படுத்திடுமோ?

தமிழ் இயங்கிடில்!

தமிழ் என்றோர் மொழி தனியே மாந்த மொழி என எண்ணிடேன் தமிழ் உயர்வென்றோதியே வாழ்ந்திடில் மாந்தர் உயர்ந்திடுவர் எனக்கருதேன் தமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய் மாற்றுமொழி பேசுவோர் என் சோதரர் எனக் கொண்டாட நான் மறுக்கிலேன் தமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை தமிழரிலை என்று செப்புவாரை தூற்றிட தமிழ் என் தேசம் எங்கும் வாழ் சாதாரணர் மொழியெனும் மகிழ்வில் பூரித்திடுகின்ற என் இதயம் தமிழ் அந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட எங்கும் எதிலும் என்றும் எப்பொழுதும் தமிழ் இயங்கிடில் தரணியில் செறிவே!

புதுப் பயணமதில்..

போரில் கொள்ளைகள் என்றும் நடக்கும் போர் கொள்ளைக்காகவும் நடக்கலாம் போர் போரிற்காகவும் நிகழ்த்தலாம்  சுரண்டலும் ஊழலும்  சுத்துமாத்து பண்ணலும் அரண்டு ஓடிவிடுமோ  மிரழ்வரோ  ஆட்சி ருசியில்  பாராளுமன்ற  அரசியல் பண்ணும் பேர்வழிகள்.. தானே மாறும் என நினைத்திடில்  முடிவுறுமோ? பாராளுமன்ற வழிமுறைகள் பலித்திடுமோ போராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு! போரிட்டு தோற்பதுவும்  வெல்வதும் நிகழும் போர் போரை மேவும்  போர் போரால் வெல்லும் போர் அழிவில் பூரித்து மகிழ்வர் ஆழ்பவர்... எனில் எழுவரோ ஏதிலிகள் நனிபேருவகை அடைந்திட நலிந்தவர்க்கும் ஏது உண்டோ? சலித்திடவோ ஓட்டுபோட்டே... நாளை வேளைவரும்  அரசியல் நிலை உணர்ந்த மக்கள் திரள் வெகுண்டெழும்  புதுப் பயணமதில் வெகுஜனப் போராட்டப் பாதையதில் மக்கள் அதிகாரம் பெற்றிடில்  மாற்றம் நிகழுமே! 

மண்ணில் மாண்பு!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாண்புகள் பெறலாம் மகிமை பெறும் சொர்க்கமும் மண்ணுலகிலேயே கிட்டும் மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென வேந்தர் என எழுந்து நிற்கும்  முதலாளிய அதிகாரம் ஒழித்து  பாட்டாளிகள் எழுந்து நின்று கூட்டாளி என கூடியவரை இணைத்து சட்ட மறுப்பென கிளர்ந்து சனநாயகத் தேர்தலை ஒழித்து புரட்சிகர மார்க்கத்தில் மக்கள் அதிகாரம் பெற்றிடில் மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!

காரணமின்றியோ?

கொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே சட்டென காலம் மாறிய விந்தை இதுவே இயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென பயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே பயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம் நாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென நாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ வேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ பூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ காரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ?

படுத்திடுமினி கொடுங்கோல்!

ஏனந்த நாட்கள் மீண்டும் வருகின்றன வானத்தில் கூக்குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன கானகத்தில் ஒப்பாரிகள் மீண்டும் கேட்கின்றன! கொத்துக்கொத்தாய் மனிதர் அழிந்திடப் பொத்தம்பொதுவாய் மனிதம் அழிந்தது சாத்தியமாகாதென சரித்திரம் எழுதியது! விடுதலைக்கான மார்க்கம் இழந்துநிற்க சடுதியில் நிகழ்ந்தன சதிவலைத் திட்டங்கள் கொடுமைகள் செய்தோர் மாய்ந்தனரில்லை! கொடுமைகள் அரங்கேறத் திட்டமிட்டாரையே விடுதலைக்கு துணைகேட்கும் நிலையாச்சு கேடுசெய்தாரை அண்டிவாழ காலமாச்சோ! இனிஎமக்கு இயலுவன எதுவெனத் தேர்வமோ தனித்தியங்கி தரித்திரம் போக்குவதுவோ சனிமாற்றம் வருமெனத் தான் காப்பதுவோ! ஒடுக்கப்பட்டவர் தேசங்கள் எழுந்திடவென விடுத்திடுவோம் ஒன்றுபட அழைப்புக்கள் படுத்திடுமினி கொடுங்கோல் ஆட்சிகள்! சென்ற வருடத்தில் முகநூலில் பதிவானது செம்மையாக்கத்துடன்

பிறந்த நாளாம் இன்று!

அன்று பிறந்தது அன்னைக்கு மகிழ்வு இன்று வாழ்த்திடும் உள்ளங்களுக்கு மகிழ்வு நன்று வாழ்ந்திடில் நலம் ஓம்பிட எனக்கும் மகிழ்வு நின்று உலகில் நீடு வாழில் குடும்பம் மகிழ்வு வென்று நின்றிடில் எந்தன் மண்ணுக்கும் மகிழ்வு தோன்றில் புகழெனில் சான்றோர்க்கும் மகிழ்வு

ஆழும் பரம்பரையுடன் கைகோர்த்து...

ஒன்றும் செய்வதற்கு முடியாது முனகிய பொழுதுகள் மறப்பமோ? ஏன் பிறந்தோம் என ஏங்கிய நாட்கள் ஏன் இந்நிலையில் தாழ்ந்தோம் எனத் தவித்த நாட்கள் ஒரு பொழுது நினைத்தோமோ தெரு வெங்கும் மனிதர் உயிர் காக்க ஓடஓட விரட்டவும் சுடவும் குண்டுமாரி பொழியவும் ஓங்கிய குரல்கள் ஓவென கத்தும் கணங்கள் யாரேனும் நினைத்தோமோ பாவப்பட்ட மக்களா அவர்கள் பஞ்சப்பட்ட மக்களோ அவர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆழ நினைத்ததனால் மாண்டனரே... இன்றோ ஆழப்படுவோர் அனாதரவாய் அண்ட வெளி எங்கும் துண்டமாய் கிடக்க... ஆண்டபரம்பரை மீண்டும் எழுகிறது மீழ மீழ ஆழப்படுவோர் ஈய்கின்ற ஓட்டுக்கள் மூலம் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை உலகுக்கு காட்டி உலகை ஆழும் பரம்பரையுடன் கை கோர்த்து மேலும் மேலும் அடிமை மிடிமை நிலையில் மீளாது நாம் இருத்தற்கே! இது சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் எழுதிய கவிதை செம்மையாக்கத்துடன்

உடன்பட்டமோ? கடன்பட்டமோ?

ஏதடா, ஏதடா இந்த உலகம் ஏதடா ஏனினி நாங்க?  ஏனினி நாங்க?   சோலையுமில்லை, ஆலையுமில்லை காடுமில்லைக் களனியுமில்லை பாலைவனம் ஆச்சுது நஞ்சூறிய நம் நிலம்! நீரிற்கு காசு, சுவாசிக்கும் காற்றுக்கும் காசெனில் ஏழையர் பணமே போகுமே போகுமே பல்தேசிய கம்பனிப் பைகளும் நிறையுமே! ஆண்டவன் அருளை வேண்டி வர என்றே நாள்பல நமக்கு நாள்பல நமக்கு அட்சய திதியும் வளை காப்பு விரதமும் தீபாவளியும் கோயில் திருவிழாவும் கொண்டாடிட கொண்டாடிட போச்சு! பண்டம் பலவும் வேண்டிட வேண்டிட திண்டாட்டம் பணத்திற்கு வந்ததெனில் கடன்படு கடன்படு என காட்டினர் உடன்படு உடன்படு என பத்திரம் கேட்டனர்! விட்டு விடுதலைஆவதற்கு வழியிலை. பொல்லா நிலை போயகலப் பாத்திருக்க நல்வாழ்வு வருமென நாலு திக்கும் வரவேற்க வரி பெருக வரி பெருக வசூலாகும் வசூலாகும் பரிவும் இல்லை பண்பும் இல்லை தெரிவு உண்டு தேர்தல் உண்டு தேயத்து மக்களுக்கு தேர்வதற்கு வழியுமுண்டு பல் தேசிய கம்பனிகள் நல் உற்பத்தி செய்திடுவர் பெறுவதற்கு ஏதுமில்லை தடைகள் இங்கு பல்கிப் பெருகிட மூலதனம் அவர்க்காகும் பட்டினி கிடந்தேனும் நுகர்வுக்காய் நாமிழப்போம் தவணைக் கட்டணத்தில் தரம்மிக்க பொருட்கள் பூச்சிய வட்டிய

நிலைக்க செயவமே !

தாள் வீச தலை யெடுப்பாரே பலர் கோள் மூட்ட கோஷ்டி கட்டிட வேள் என்றே எழுவர் எங்கும் வாள் வீச்சே பேச்சாச்சு இன்றே பாழ் ஆச்சே பண்பு போச்சே என கொள்கை நின்றார் முறை இடவே இளஞ்செழியன் நீதிபதி நீட்டும் கரங்களை இறுகப் பற்றி நிலைக்க செயவமே அமைதி!

ஏந்திடும் கரங்களுக்குள்...

நீதியென ஒன்று நிலைக்குமென்று யார் சொன்னது சேதியிது புதினமன்று செய்வதற் கொன்றுமில்லை நாடிநிற்க எமக்கே நல்லார் இலையெனில் தேடிநிற்க மானிடர்க்கு மார்க்கம் ஏது கண்டீர் வாடிநிற்கும் மாந்தர்க்கு அறியாமை உள்ளவரை... பாடிப்பரவியே நிற்கும் பண்படா நிலையினில் ஏந்திடும் கரங்களுக்குள் மாற்றத்திற்கான மாற்றுவழி..?

விடை கிடையா வினாக்களோடு!

மனம் இறுகிய கணங்களில் மலருமோ எங்கள் இதயம்? மடிந்தவர் முகங்கள் எங்கள் மனவெளி எங்கனும் வீழ்ந்தவர் நினைவினைச்  சுமந்திடும் கணங்கள் ரணங்களாய் நினைவுகள் நிகழ்ந்தன எல்லாம் நிதமும் நினைவுகளாய் வதைக்கும் நிமிடங்கள் நிம்மதி குலைக்கும் கேள்விகள் இனி... இழப்பதற்கு எமக்கு இருப்பது எதுவோ? கனிந்திடுமோ எனும் கனவினில் எமக்குள் ஏன் கூவல்கள்... அடுத்துக் கெடுத்தவர் பக்கம் பாப்பர் என்றும் தொடுத்து போருக்கு துணைநின்றவர் துயர் தீர்ப்பரென்றோ தொலை தூரத் தேடல்கள்... விரிந்து கிடக்கும் பூமிப் பந்தில் விடை கிடையா வினாக்களோடு நடையினைத் தொடர்ந்திடும் நடைப் பிணங்களாய் நாங்கள்... மானுடம் தளைக்கும் பாதையில் ஏனுடன்பட இன்னும் தயக்கம்?

பட்டறிவு பெற்றோமென!

வேளாண்மை வீடு வந்து சேர்ந்திடில் வீடெல்லாம் நிறையுமே மகிழ்வு மலர்ந்திட! பாடான பாடு பட்டுலைந்திட  என்றும் நாடாதே நமக்கென்றும் நயங்கள் சேர்ந்து... சேராதே சிறுபிள்ளை வேளாண்மை சிறந்து தேரோமோ இனியேனும் பட்டறிவு பெற்றோமென ஓர்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தே சேர்ந்தால் ஜகமெங்கும் வியக்குமே நிமிர்ந்து!

அறிவு நிறைந்திட!

மன்றத்து நூலகத்தில் மனதாற இருந்தேன் என்றென்றும் எனக்கிது சொர்க்கம் என்பேன் தொன்று தொட்டு தமிழ் வளர்ந்தவாறு கண்டேன் நன்னெறி நம்மண்ணில் நடந்தவாறு உய்த்தேன் சென்னெறியை சேமமுறச் செய்திடும் என்பேன் இன்புற யார்க்கும் இயலுமாறு இருக்க செய்திடத் தோன்றிடும் போதினில் அன்னை தமிழே! அன்புற யாவர்க்கும் அறிவு நிறைந்திட  என்றும் தாய்மொழிக் கல்வியே திறமென்பேன்!

பகுத்து உணர்ந்திடில்...

பழயன தருவது பயனெனக் கொள்வதோ? பழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர் புதுமை கசந்திடப் பழமை புதுக்குவர் பழமைக்குள் உள்ளன அறிவின்ஆணிவேர் பழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர் பகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே!

சட்டம் இலையேல்?

யாழ் மண்ணே இன்றேனோ இவ்வாறாய் ஆனாய் யார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப யாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ யாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ யாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு  இலையோ யார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல் யாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ யாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்?

குளிர்காற்றும் உட்புக!

வான்முட்ட வளர்ந்த அரச மரம் எங்கே? வாழைமரமும் வளர் வாகையும் எங்கே? தேன்சுவைதரும் மாங்கனி தரு மரம் எங்கே? தென்னை பனை கருவேம்பு தானெங்கே? தேக்கும் பாக்கு தரு கமுகும் எங்கே? வேம்பும் முருங்கையும் தேடற் கரிய செம்பழந்தரு மாதுள செடியும் எங்கே? ஆவலைத்தூண்டும் நாவல் மரம் எங்கே? சுளை சுளையாய் பழந்தரு பலாமரம் எங்கே? விளாத்தியும் இலுப்பையும் போயொழிந்ததும் எங்கே? மரஞ்சூழ் முந்தையர் நிலம் நாலாய் பிரிபட மண்குடிசை இருந்த இடம் மறைந்திட எண்ணரிய மரம் சூழ்ந்த நிலமதில் எத்தனை வீடுகள் எழுந்தன நெருங்கியே... எப்படி குளிர் காற்றும் உட் புக இயலும் சுட்டெரிக்கும் வெயிலைத் தூற்றி ஏதுபயன்?

சேமம் பெறுவமே!

வேல் எழுந்தது வெல்வது உறுதி மேல் கிழம்பும் மேவி உயர்ந்திடும் பொல் லாப்பு போக பொக்கிசம் பெருகும் வல்வினை ஆற்றிட வளம் சேர்க்குமே மல்லுக்கு நிற்பாரை மனந் திருப்புமே கல் என எமக்கு சொல்லி நிற்கும் நல் வாழ்வு நமக்கென தந்திடும் பல் ஆண்டு நமக்கு அருள் தந்திடும் செல் நெறிக்கு துணை நிற்கும் நெல் விளைந்திட சேமம் பெறுவமே

பொதுமை பொங்கிட!

இரவில் ஒளிபரப்பும் இங்கிதம் எங்கும் இயலும் உலகினில் அன்பு நிறையும் கனவு மெய்ப்படும் கருத்து நிலைக்கும் விளக்கம் கிடைக்க விருப்பு வந்திடும் துலக்கம் ஆகிடப் புதுமைகள் நிகழும் நம்மண் இதுவென நமக்குள் பெருமிதம் நாடியன எல்லாம் நல்லன என்றிட தேடியன தருமே ஆனந்தம் என்றுமே! பாடிப் பரவிட பற்பல பண்புகளே பொதுமை பொங்கிட அனந்தம் இனங்களே!

மாறோமோ, மாற்றென்றே!

நஞ்சென உணவென நவில்வர் அறிவோர் நஞ்சை புஞ்சை எல்லாம் நாசமாகப் பயிர் பச்சை எங்கும் நச்சுக் கலவை... தாய்மை உற்றவர் உணவே நஞ்செனில் தாய்மை தரும் தாய்ப்பால் நஞ்சேயாம்! மரபணு மாற்றப் பயிர்ச்செய்கையெனெவும் செயற்கை உரமெனவும் கிருமி நாசினி எனவும் மரபாய் அமை இயற்கை வேளாண்மைக்கு மாற்றெனில் தாய்ப் பால் அமுதென வாய்க்குமோ குழந்தைகட்கு! மாறோமோ, இயற்கை வேளாண்மையே மாற்றென்றே!

கோர்க்காரோ கைகள்!

ஆணாதிக்க காவிகளாய் அன்றுதொட்டுப் பெண்கள் தோணாதே இவர்க்கு தமது அடிமை நிலையது? வீணான   வார்த்தை வீச்சினையே வீசிடுவர் பண்பென்று கொள்வன பாழவர்க்கே என்றெண்ணார் பதிவிரதை எனவும் பத்தினி எனவும் கொள்வர் மதிகொண்ட மங்கையராய் திகழ்ந்திட முயன்றால் கூசாமல் வேசையென மொழிதலை செய்வர் கூற்றொன்று கூறினால் அடங்காப்பிடாரி என்பர் அடுத்தவரை ஆட்டக்காரி எனவும் நவில்வர் விடுப்புநிலை விட்டுச் சிந்திக்க முயலாரோ தொடுக்காரோ தோழரென கோர்க்காரோ கைகள்?

சிறுபராயம்..?

நாளைய தலைமுறை நாடி வந்தனர் கோளையர் இலையென காட்டி நின்றனர் வேளை இதுவே விதைப்பதற்கு ஆனது இளைய பருவம் அறிதலுக்கு ஆனது பொது உடமை தத்துவம் அறிந்திடில்  அகிலத்தை மாற்றும் பக்குவம் அடைவர்.. சிறுபராயம்..?  சமூக அக்கறை விதைப்பில் உறுதிபடைத்து உன்னதம் நிகழும் தானே!

ஆதிக்கம் எதிர்த்தே..

ஆதிமுதல் அடிமையாய் அல்லல் பட்டவர் மேதினத்தில் எழுந்து குரல் கொடுத்து நின்று நீதிநெறி சமத்துவம் காத்து நிற்க வென்று வீதிவழி நீண்ட நெடு ஊர்வலம் சென்று சேதி சொல்லி நிற்பர் அடங்கிடோம் என்று... ஆதிக்கம் எதிர்த்தே மக்கள் அதிகாரம் பெறுவர்!