மீண்டுமொரு முறை மீள நினைக்கின்றேன் ஆண்டு முப்பது ஆயிற்று ஆண்டவரொடு கூடி மாநிலக் கல்லூரியில் மலர்ந்த இளமையில் மாணவராய் நடந்த மலரும் நினைவுகள் அருள் நடராஜனின் அருமையான பேச்சிலும் மகாவிஷ்ணுவின் தினமும் கூறும் புதுக் கவிதையிலும் ஆண்டவர் எந்தன் காதோரம் கூறும் கைக்கூக் கவிதைகளிலும் கருணாநிதியின் கீழைக் காற்றுத் தந்த மரபுக் கவிதையின் உரம் மிக்க வரிகளிலும் தோய்ந்த எனது நாட்கள் மீள ஒருதடவை நினைக்கின்றேன் இரவி சங்கர் செங்குட்டுவன் சீனிவாசன் பாபுவென எனக்கிருந்த இனிய அந்த நட்பு வட்டங்கள் இனிநான் நாடி தேடி அடைந்திட என் காலமும் போதுமோ? அவரவர் குடும்பம் அவரவர் தொழில்கள் அவரவர் தேடல்கள் என நகர்ந்த ஆண்டுகள்... என் மனவெளி எங்கும் அந்த மூன்றாண்டுகளின் அனுபவ பதிவுகளோடு... இனிவரும் காலங்கள் தமிழக மண்ணில் என்பாதம் படியும். அழ பகீரதன்
அழ பகீரதன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். அப்போது இனவாதம் இருந்திருக்கலாம். 1978 என்று நினைக்கின்றேன். க பொ த சாதாரணப்பரீட்சைக்காக விண்ணப்பம் கொடுக்கும் நாள் எனக்கருதுகின்றேன். அன்று எங்களை ஆசிரியர் கையெழுத்து வைப்பதற்காக அழைத்திருந்தார். எல்லோரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார்கள். நான் தமிழில் தான் கையெழுத்து இட இருப்பதாக சொன்னேன். நண்பர்கள் தமிழில் கையொப்பம் வைத்தால் புள்ளிகளை வெட்டிக் குறைப்பார்கள் என்ற விதமாக பேசினார்கள். அவர்கள் என்னை பயம் காட்டினார்கள். நான் மசியவில்லை. அமைதியே உருவான எனக்கு இது கோபத்தை தான் ஏற்படுத்தியது. நான் தமிழில் தான் கையெழுத்து இடுவேன் என்று கத்தினேன். அவ்வாறே தமிழில் கையெழுத்து இட்டேன். நண்பர்கள் என்னை ஏளனம் செய்ததாக எனக்கு ஞாபகம். பரீட்சையும் வந்தது. அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டையிலும் தமிழில் கையெழுத்திட்டேன். பரீட்சைத்தினங்கள் தோறும் அதில் தமிழில் தான் கையெழுத்திட்டேன். சில மாதங்களில் பரீட்சைப் பெறுபேறும் வந்தது. நண்பர்கள் பயமுறுத்தியது போல் பெறுபேற்றில் எனக்கு புள்ளிகள் குறைக்கப்படவில்லை. எதிர்பார்த்தது போன்றே பெறுபேறு கி...
முதல் முதலாக அரச உத்தியோகம் கிடைத்தபோது நான் எழுதிய கவிதை... பலவருடப் படிப்பின் பயன் ஈரிரண்டு வருடங்கள் காத்ததில் எனது மண்ணில் கிடைத்தது ஒரு வேலை ! யாழ்ப்பாணம் குளப்பம் மிகு இடம் எனச்சொல்லி கொழும்புக்கு மாற்றம் கேட்கும் ஊழியர் நிறைந்த காலம் யாழ்நகர் அமைந்த ஆசுபத்திரியில் கிளாக்கர் எனப் புது நாம ம் எனக்கு ! தாண்டிக்குளம் தாண்டி வந்த சேதி பேப்பரிலும் போட்டார்கள் மூவர் எழுதுவினைஞராய் சேர்ந்த போதிலும் ஒருவரே வந்து சேர்ந்தார் என ! வேறென்ன வேண்டும் அயல் வீட்டுப் பெரியவர் பேப்பரில் பார்த்தேன் பெயர் என்றபோது சந்தோசித்தேன் ! வேலை - பேப்பர் , பென்சில் , பேனா கோப்பு , கொப்பி , படிவம் எனச் சூழ இருக்கையில் நினைப்பு பெரிது ! மாதம் இரண்டாயிரத்து இருநூறு சம்பளம் இரண்டாயிரம் அம்மா கையில் திணித்த போது பூரிப்பு அம்மாவிற்குள் ! முன்பிருந்த நச்சரிப்பு சோம்பேறி என ஏச்சு தண்டச் சோறு எனல் எல்லாம் போச்சு . பரிவு பாசம் பற்றுமிக நானே ராஜா ! என்ன இருந்தாலும் உழைப்ப...
கருத்துகள்