அனுபவம்
முதல் முதலாக அரச உத்தியோகம் கிடைத்தபோது நான் எழுதிய
கவிதை...
பலவருடப்
படிப்பின்
பயன்
ஈரிரண்டு
வருடங்கள்
காத்ததில்
எனது
மண்ணில்
கிடைத்தது
ஒரு
வேலை!
யாழ்ப்பாணம்
குளப்பம்
மிகு இடம்
எனச்சொல்லி
கொழும்புக்கு
மாற்றம்
கேட்கும்
ஊழியர்
நிறைந்த
காலம்
யாழ்நகர்
அமைந்த
ஆசுபத்திரியில்
கிளாக்கர்
எனப்
புது
நாமம்
எனக்கு!
தாண்டிக்குளம்
தாண்டி
வந்த
சேதி
பேப்பரிலும்
போட்டார்கள்
மூவர்
எழுதுவினைஞராய்
சேர்ந்த
போதிலும்
ஒருவரே
வந்து சேர்ந்தார்
என!
வேறென்ன
வேண்டும்
அயல்
வீட்டுப்
பெரியவர்
பேப்பரில்
பார்த்தேன்
பெயர்
என்றபோது
சந்தோசித்தேன்!
வேலை-
பேப்பர்,
பென்சில்,
பேனா
கோப்பு,
கொப்பி,
படிவம்
எனச்
சூழ
இருக்கையில்
நினைப்பு
பெரிது!
மாதம்
இரண்டாயிரத்து
இருநூறு
சம்பளம்
இரண்டாயிரம்
அம்மா
கையில்
திணித்த
போது
பூரிப்பு
அம்மாவிற்குள்!
முன்பிருந்த
நச்சரிப்பு
சோம்பேறி
என
ஏச்சு
தண்டச்
சோறு
எனல்
எல்லாம்
போச்சு.
பரிவு
பாசம்
பற்றுமிக
நானே
ராஜா!
என்ன
இருந்தாலும்
உழைப்பிற்கு
மதிப்புண்டென
உள்ளுக்குள்
நினைத்தேன்!
தொடர்ந்த
மாதங்களில்
சேட்டு
ரவுசர்
சொந்தப்
பணத்தில்
வாங்கல்
தேனீர்
வடை
கடையில்
கூடி
நண்பருடன்
உண்ணல்
காசதிகம்
எனிலும்
சொந்தப்
பணத்தில்
அனுபவம்
புதிது.
வாசிக்கப்
புத்தகங்கள்
வாங்கப்
பயமில்லை
அம்மாவின்
பணம்
திருடி
புத்தகங்கள்
வாங்கி
ஏச்சுக்கள்
வேண்டிய
அனுபவங்கள்
பலவுண்டு!
சொல்லிக்
கொள்ள
வேலை
கையில்
பணம்
பூரிப்புத்
தான்
எனிலும்-
அடுத்தவர்
அனுபவம்
நோக்கில்
துணையென
ஒன்றுவர
மழலைகள்
அழுகைகள்
தொடர
நிலமைகள்
வேறாய்
மாறலாம்
அனுபவம்
பிறிதாய்
தோன்றலாம்!
1991
அழ.பகீரதன்
கருத்துகள்
நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
உங்களுக்கு கருத்திடும்போது கேட்க்கும் இந்த குறிச்சொல் ரோபோ- வை நீக்கிவிடவும். கருத்து இடுபவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.