தொடர்பறுந்த பட்டமாய்…
தொடர்பறுந்த பட்டமாய்…
பொய்யாய் அழுதென்ன
மெய்யற்ற உயிர்
வாழ்வென்ன
பொதுவில் அன்பில்லா
அலட்சியம்
சுருங்கிய உலகுள்
அயல் என்னவோ அதிகதூரம்
ஆருக்கு ஆர் சொல்ல
பேருக்குத் தான்
இப்போ உறவுகள்
பாருக்குள் பழகிய
முகங்கள்
பல பக்கங்களிலும்...
அயல் வீட்டு முகவரி
தெரியாத் தொலைவுகள்
நன்றாய் ஆர் சொல்வார்
நட்புடன் பழகா
அயலெனில்...
தொன்று தொட்டு
தொடர்ந்த பந்தம்
தொடர்பறுந்த பட்டமாய்
எங்கோ ஒரு மரத்தில்
தொங்கியபடி!
அழ. பகீரதன்
கருத்துகள்