இலங்கையன் என... அழ.பகீரதன் தமிழர் தேசிய இனமெனத் தம்மை உணர்ந்து நிலைநிறுத்த சுயநிர்ணயம் இருக்குமெனில் முஸ்லிம் இனம் தேசிய இனமென யாவரும் ஏற்றிடக் காலம் கனியுமெனில் மலையகத் தமிழர் இனமென ஏற்றிட , இந்நாட்டின் முதுகெலும்பாய் சம ஊதியம் பெறும் காலம் அமைந்திடக் கூடுமெனில் சிங்கள மக்கள் மனங்களைச் சிறுமைப் படுத்த இனவாதம் கக்குபவர் தேரர் ஆயினும் ஓராத அரசொன்றை மதச்சார்பற்றுத் தேர்வர் எனில் கூட்டாட்சியில் சிங்களர் தமிழர் முஸ்லிம் மலையகத் தமிழர் சுயநிர்ணயம் ஏற்றிட இலங்கைத் தீவு ஒன்றியம் ஆயின் நானும் எழுவேன் இலங்கையன் என!
கருத்துகள்