தோழர் மணியம் நினைவுநாள்

கம்யூனிஸ்ட் போராளி தோழர் மணியம் நினைவுநாளில் எழுச்சியுறுவோம்



அலையின் மோதல்
மணியின் நாதம்
புதியபூமி விடுக்கும் அழைப்பு
தாவி ஒலித்து வரவழைக்கிறது
முன்னே செல்வீர் முன்னுற விரைவீர்
மேலும் முன்னே சென்றிடத் திரள்வீர்....
...........................................................................
பூமியின் அமைப்பைப் புதிதாய்ப் புனைவோம்
புதுவரலாறும் நாமே படைப்போம்
முன்னோக்கிய நம் பெரும்படை நடப்பை
மலையும் வனமும் மறித்திட மாட்டா
நான்கு திசையிலும் நமது சக்திகள்
ராஜாளிகள் போல் சிம்மங்கள் போல்
கள்வர் கயவர் கோட்டைகள் கக்கும்
மக்கள் எதிரிகள் மாய்வதும் உறுதி
முன்னே பாய்வீர், முன்னுற விரைவீர்
புதிய பூமியின் வரவை உரைப்பீர்
மணி ஒலி இசையும்
புதிய பூமியின் முரசின் முழக்கமும்
எல்லாச் செவிகட்கும் எட்ட எழுப்புக!

நன்றி: புதிய பூமி  (1985)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்