மொழியெலாம் ஒன்றே
மொழியெலாம் ஒன்றே , இதில் கழிவொன்றும் இல்லைக் காணும் இழிவாக நமக்குள்ளே ஏன் இனப்பூசல் வேண்டாம் விடும் . எம்மொழியே சிறந்த தென்றே தம்பட்டம் அடிக்கும் நிலை இம்மட்டும் போதும் அப்பா இனப்பூசல் வேண்டாம் அப்பா முன்னாளில் நாமெல்லாம் ஒன்றே முகத்தினில் சைகையினால் நன்றே அகத்தின் கருத்தைச் சொல்வொம் அதனால் நாமெலாம் ஒன்றே நிலத்தினில் வேறுபாடு தன்னால் நிலவிடும் மொழிகள் பலவாய் நீண்டு போயின் றுலகில் நிலவும் வேற்றுமை ஆயிற்றே எம்மொழி பேசினாலும் எங்கள் உள்ளக் கருத்தெலாம் ஒன்றே உண்மை இதுவென புரியில் உலவும் வேற்றுமை இலையே ! “ எம்மொழியும் நன்றே ! அன்றி உம்மொழியும் நன்றே !” என்ற எண்ணம் கொண்டிங்கு வாழில் எல்லார் நலனும் ஓங்கும் ! நன்கிதை அறிந்து கொண்டால் நன்மை எமக்கு பலவாம் அன்பினால் ஒன்றாகி நாங்கள் அகிலத்தில் நன்றே வாழ்வோம் ! இன்றே விடுவீர் மொழிமோகம் இன்னோர் மொழியை பழிக்கும் தன்மை ஒழித்து நீவிர் இன்புற்று வாழ்வீர் உலகில் !