மீண்டுமொரு முறை மீள நினைக்கின்றேன் ஆண்டு முப்பது ஆயிற்று ஆண்டவரொடு கூடி மாநிலக் கல்லூரியில் மலர்ந்த இளமையில் மாணவராய் நடந்த மலரும் நினைவுகள் அருள் நடராஜனின் அருமையான பேச்சிலும் மகாவிஷ்ணுவின் தினமும் கூறும் புதுக் கவிதையிலும் ஆண்டவர் எந்தன் காதோரம் கூறும் கைக்கூக் கவிதைகளிலும் கருணாநிதியின் கீழைக் காற்றுத் தந்த மரபுக் கவிதையின் உரம் மிக்க வரிகளிலும் தோய்ந்த எனது நாட்கள் மீள ஒருதடவை நினைக்கின்றேன் இரவி சங்கர் செங்குட்டுவன் சீனிவாசன் பாபுவென எனக்கிருந்த இனிய அந்த நட்பு வட்டங்கள் இனிநான் நாடி தேடி அடைந்திட என் காலமும் போதுமோ? அவரவர் குடும்பம் அவரவர் தொழில்கள் அவரவர் தேடல்கள் என நகர்ந்த ஆண்டுகள்... என் மனவெளி எங்கும் அந்த மூன்றாண்டுகளின் அனுபவ பதிவுகளோடு... இனிவரும் காலங்கள் தமிழக மண்ணில் என்பாதம் படியும். அழ பகீரதன்
பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும் பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம். அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது. 'தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்' போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்...
ஒரு பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. நாள் முழுவதும் தாயுடன் இருக்கவே குட்டிக் குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டுப் பிரிந்து சென்றதே இல்லை. ஒரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது: "மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதலளிக்கக் கூடாதா?" குட்டிக் குதிரை தலையை அசைத்துச் சொன்னது: "ஏன் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்." மிகவும் மகிழ்ந்துபோன தாய்க்குதிரை சொன்னது: "நல்ல பையன், இப்ப எனக்காக கோதுமை மூட்டையைச் சுமந்து கொண்டு மில்லுக்கு போகவேணும்." குட்டிக்குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க்குதிரை ஏற்றிவிட்டது. அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக்குதிரை சொன்னது: "அம்மா, என்னுடன் நீயும் வாவேன்." "ஏன்? எனக்கு உன்னுடன் வர நேரமிருந்தால் உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லையே! நீ நேராக மில்லுக்குப் போய் விரைவாக வீட்டுக்குத் திரும்பவேண்டும். இரவுச் சாப்பாட்டுக்காக நான் காத்திருப்பேன்." முதுகில் கோது...
கருத்துகள்