சேர்ந்திடும்

அனுதினமும் துயரெனில்
அதிகாலை அமைதியில்
அரிதினில் தெரிவாய்
அன்பினில் ஏற்றம்!

சிறுசிறு துன்பம்
தேற்றிடும் மனம்
பெறுகின்ற பேறிற்காய்
பொறுத்திடும் கணங்கள்!

குழந்தைகள் குறும்புகள்
வளர்ச்சியின் துடிப்பு
மழலைகள் மலர்வு
மனதினில் நிறைவு!

விடலைகள் சேட்டைகள்
விடுஅது இயல்பு
அடங்கிட மறுக்கின்
அனுபவம் வாய்க்கும்!

பிரச்சனை என்பதுவே
நாட்களின் தோற்றம்
கரச்சல் என்பதுவே
காலத்தின் தோற்றம்!

மாறுடும் தோறும்
ஆறிடும் மனம்
தேறுவது ஒன்றே
கேடில்லை முயலில்!

முரண்படில் இயக்கம்
முகிழ்த்திடும் ஏற்றம்
செறிவது கூடும்
சேர்ந்திடும நலங்கள்!

அழ.பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

நாம்

இலங்கையன் என