நாம்
நாம் அழ. பகீரதன் வாள் வீச்சின் வன்மையில் ஆள் பூமியின் பரப்பை விரிவுபடுத்தலில் வீரம் காட்டிய தொல் மறவர் குடியெனப் பிதற்றியே வேற்றுநாட்டவரை அடிமையாய் கொண்டதனையும் வேற்றுநாட்டுப் பெண்டிரைக் கொண்டதனையும் வேற்று நாட்டு வளங்களைக் கொள்ளைகொண்டதனையும் பெருமையெனச் சாற்றி யாவரும் கேளிர் என நேர்நெறியில் பகுத்துண்டு பல்லுயிரோம்பிய பண்டைப் பழமையைக் குலைப்பீரோ ? உலகெங்கும் நிகழ்ந்த யுத்தங்களிலும் போர்களிலும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் கலவரத்திலும் கொந்தளிப்பிலும் குண்டடிபட்டு மாண்டவரின் சோதரர் நாமன்றோ ?