புழுங்கிப் போவதுவோ?


திருமணம் வாழ்வின் தொடக்கம்
இருமனம் இயற்றுடும் தவமாம்
நற்பேறு பெற்றிடவெனவே
நல்வரனாய் வரவேண்டும் என
பல்லோர் வாழ்த்த வாழவென
காத்திருந்து காத்திருந்து வந்த வரன்
சேத்திருந்த பொருளெலாம்  கொட்டி
பாத்திருந்து பல்லோர் வியக்க
மணமேடை அலங்கரிப்பில் மலந்திருக்க
மாண்புடையோர் வந்து வாழ்த்திட
சேர்ந்தனர் சோடிப் பொருத்தம் வியந்திட!

கூடினர் முயங்கினர் ஊடினர் தேடினர்
பாடினர் பரவினர் நாடினர் நாட்டினர்
வாழ்வின் அர்த்தங்கள் பற்பல கண்டனர்
ஆழ்தலின் உணர்வின்றிஅன்பினில் கலந்தனர்
சூழ்ந்தவர் பார்த்தவர் வியந்திட வாழ்ந்தனர்
பேறாய் பெற்றனர் மகவினை மகிழ்வினில்
ஊறாய் வந்த ஊற்றென உவந்தனர்
சாறாய் கருதியே பற்றொடு அணைத்தனர்
மாறா அன்பொடு  மலர்ந்தனர் மகிழ்ந்தனர்
உறவின் கலப்பின் உன்னதம் என்றனர்

பின்வந்த நாட்கள் பிளவுகள் ஆகின
நாட்கள் நகர்ந்திட நற்றவம் முடிந்ததோ
ஆட்கள் பாத்திருக்க சூட்சிகள் நிகழ்ந்ததோ
கேள்விகள் பெருகப் பதில்கள் ஒழிந்ததோ
கொள்கைகள் மாள குடும்பம் குலைந்ததோ
செவிகள் செவிடாக கண்கள் குருடானதோ
பாவிகள் ஆவிகள் பெருகிட அதிர்விதுவோ
உயிரும் மெய்யும் வேறு வேறானதோ
உறவின் கலப்பு பிரிவே முடிவாவதோ
அகமும் புறமும் புறமும் அகமுமெனவோ
நியதியெனவே புழுங்கிப் போவதுவோ?

அழ பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என