மாணவர்களின் கல்வியில்...

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இன்றைய தினம் எனது ஊரில் உள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக வரச்சொல்லி சென்றேன். மாணவர்களுக்கான மன்றம் உருவாக்கும் நோக்குடன் அந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது. அங்கு பல வயதினரான மாணவர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கற்பதற்கான சூழல் இருப்பதில்லை என குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.
உண்மைதான் அயல் வீடுகளில் வானொலிச் சத்தம் அயல் கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் வீடுகளிற்கிடையில் இடம்பெறும் மோதலும் சண்டையும் குடிவெறியும் கும்மாளமும் மாணவர் கல்வியில் ஊக்கத்தை கெடுப்பனவாகவே இருக்கின்றன. பலவீடுகளில் தொலைக்காட்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கி தடையாக இருக்கின்றன. மாணவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார்கள்.
இவற்றை திருத்தி மக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவார்களா!
இந்த மாணவர் மன்றம் ஆக்கமுடன் செயற்பட்டு இக்குறைபாடுகளை களைந்து மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வழி ஏற்படுத்துகின்றதா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள்

கவியாழி இவ்வாறு கூறியுள்ளார்…
கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. //உண்மைதான் நானும் ஆமோதிக்கிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது