கடனெனச் சுமைகள்


கடனெனச் சுமைகள்

காலையில் எழும்புகையில்
கடைத் தெருவில் நடக்கையில்
கந்தோர் வேலையில்
மனம் சலிக்கையில்
தொல்லை வாழ்வின்
தொலையா கவலைகள்
மறக்கவென
தொலைக்காட்சி முன் இருக்கையில்
அலைபேசியில்
அன்புறப் பேச முனைகையில்
நாகரிக வாழ்வின் நயப்பில்
மகிழுந்தியில் மலர்ந்த முகத்தொடு
காப்பெற் வீதியில் வலம் வருகையில்
ஆடை வனப்பில் மகிழ்ந்து
மெழுகிய முகத்தொடு
புன்னகை புரிந்திடு மனையாள்
இடை வளைக்க எண்ணுகையில்
எதிலும் எங்கும் எப்போதும்
துரத்தும்
கடன் கொடுத்தவர் முகங்கள்…
தொடக்கமும் முடிவுமிலாத்
தொடர் கதையாய்
கடனெனச் சுமைகள்!

அழ.பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது