பண் கலை பண்பாட்டு கழக வெள்ளிவிழா



கனடாவிலுள்ள பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா இன்று (25.12.12) நடைபெற இருக்கின்றது. இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கும் தமது ஊர் கிராமம் என்ற உணர்வோடு வாழ்வது அறிவீர்கள். அந்த வகையில் ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடிதமது பண்பாட்டு அடையாளங்களை பேணும் வகையில் தமது ஊர் பெயர்களின் மன்றங்கள் அமைத்துச் செயற்பட்டுவருகின்றார்கள். அவ்வாறான ஒரு மன்றம் தான் பண்கலை பண்பாட்டுக் கழகம் என்பது. இது யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு சிறு நகரை அண்டியுள்ள ஊரான பணிப்புலம் என்ற கிராமத்தில் பிறந்து கனடாவில் வதியும் மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகத் திகழ்கின்றது. வருடந்தோறும் இந்த அமைப்பானது நவராத்திரி காலத்தில் வாணிவிழாவினையும் நத்தார் காலத்தில் ஒன்றுகூடல் கலை நிகழ்வையும் சிறப்பாக கொண்டாடிவருகின்றது. நாட்டியம் பாடல் நாடகம் என்ற கலை நிகழ்வுகளையும் சிறார் மத்தியில் கல்வி சார் போட்டிகளையும் நடாத்துவதோடு பண் ஒளி எனும் ஆண்டு மலரையும் வெளியிட்டுவருகின்றது.  அத்துடன் நின்றுவிடாது தமது கிராமத்தின் உயர்வுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கும் உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கழகமானது எதிர்கால சந்த தியையும் தமிழின்பாலும் ஊரின்பாலும் ஈடுபாட்டோடு இணையும் வகையில் அவர்களிடம் பொறுப்புக்களை கையளித்து நன்றே நூற்றாண்டு விழாவினையும் காணும் பேறு பெறவேண்டும் என புதியகாலைக்கதிர் வாழ்த்தி நிற்கின்றது

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது