இப்படியும் அறிமுகவிழாவில்....

சங்கானையில் இப்படியும் நூல் அறிமுகவிழா திரு மு. தியாகராஜா அவர்களின் தலைமையில் 23.12.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. விழாவின் நிகழ்ச்சிகளை தேசிய கலை இலக்கிய பேரவை உறுப்பினர் சபா. தனுஜன் தொகுத்து வழங்க தலைமையுரை ஆற்ற தொடக்கவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா ஆற்றினார். அவர் தனது உரையில் சங்கானை பிரதேசத்தில் அந்த காலத்தில் பல நாடக மன்றங்கள் இருந்த தாகவும் அங்கு பல நாடகங்கள் மாதந்தோறும் நடைபெற்றதாகவும் சிறப்பித்துப் பேசினார். மேலும் நூலின் உள்ளடக்கத்தில் உள்பொதிந்த விடயங்களைத் தொட்டு உரையாற்றினார். கவிஞர் எஸ். கருணாகரன் தனது அறிமுகவுரையில் கவிஞரின் இளமைக்கால இலக்கிய ஈடுபாட்டையும் அவருடனான தனது தொடர்பின் இறுக்கம் பற்றியும் கவிதையின் உள்பொதிந்த ஏக்கத்தையும் போரின் அழிவால் இழந்துபோனவை பற்றியும் அதுவே கவிஞரின் ஏக்கம் எனவும் பொருள்பட பேசினார். மதிப்புரை ஆற்றிய ஆசிரியர் ந. குகபரன் கவிஞரின் நூலுட் புகுந்து அதன் சுவையினை சபையோர் மத்தியில் தெளிவுறப் பேசினார்.
விழாவில் முதன்மைப் பிரதி கனடாவில் மறைந்த கிராம சமூக பற்றாளர் விசு க விமலன் அவர்களின் சகோதரி திருமதி தயாபரி மகேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர் ந்து கௌரவப் பிரதியை சங்கான பொது நூலகத்தில் பணியாற்றிய நூலகர் திரு கணேசு அவர்கள் பெற்றமை சிறப்புடையது. அவர் முப்பது வருடங்களுக்குமுன் சங்கானை பிரதேசத்தில் இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தவர் என்பது குறிப்பிடக்கூடியதாகும்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் சங்கானை பிரதேச பொதுசனநூலகம் தனது இலக்கிய முயற்சிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த பாங்கினை விதந்து பேசினார். நன்றியுரை ஜெ. நிவர்சன் அவர்கள் ஆற்ற விழா இனிதே நிறைவேறியது.


தலைமையுரை ஆற்றும் திரு. மு. தியாகராஜா

தொடக்கவுரை ஆற்றும் சட்டத்தரணி சோ தேவராஜா

அறிமுகவுரை ஆற்றும் கவிஞர் எஸ்.கருணாகரன்

முதன்மை பிரதி பெறும் திருமதி தயாபரி மகேசன்

கௌரவப் பிரதி பெறும் இளைப்பாறிய நூலகர் கணேசு

மதிப்புரை ஆற்றும் ஆசிரியர் ந. குகபரன்

நூலாசிரியரை கௌரவிக்கும் வங்கியாளர் திரு தியாகலிங்கம்

நூலாசிரியரின் மனைவியை கௌரவிக்கும் திருமதி  சரவணபவன்


நூலாசிரியர்


நன்றியுரையாற்றும் ஊடகமாணவன் ஜெ.நிவர்சன்


இளமைக்காலத்தில் நூலாசிரியரை ஊக்குவித்த மறுமலர்ச்சிமன்ற மூத்த உறுப்பினர் க ஞானேஸ்வரனுடன் இருவரதும் அசிரியர் மு. தியாகராஜா அவர்கள்

நூலாசிரியரை ஊக்குவித்த ஆசிரியர் சிதம்பரநாதன் அவர்களுடன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என