யாழ்ப்பாணத்தில் தமிழறிஞர் கைலாசபதி நினைவு



தமிழறிஞரும் மாக்‌ஸிய ஆய்வாளருமான கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவையொட்டி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் பேராசிரியர் க. கைலாசபதியின் 30வது ஆண்டு நினைவு நிகழ்வு-2012 எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள செயல்திறன் அரங்க இயக்க மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்விற்கு திரு. சோ.தேவராஜா அவர்கள் தலைமை தாங்குகின்றார். திரு. க. சீலன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வு ஆய்வரங்கில் "ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து" எனும் தலைப்பில் ஆய்வுரையை செல்வி யாழினி யோகேஸ்வரன் வழங்க கருத்துரையினை திருமதி ச. ஜெயந்தி ஆற்றுகின்றார்.
"கல்வி முறைமையும் தொழிலாய்வும் என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. நா. சாந்தன் வழங்க கருத்துரையை திரு. எம். இராசநாயகம் ஆற்றுகின்றார்.
"தேசியமும் தொன்மைக்கான வேட்கையும்" என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. த. ஶ்ரீபிரகாஸ் வழங்க கருத்துரையை திரு, க. தணிகாசலம் அவர்கள் ஆற்றுகின்றார்.
இறுதியில் "அவசரம்" என்ற ஓரங்க நாடகத்தினை  திரு. த. கில்மன் அவர்கள் வழங்க திரு. வி. சருசன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு  இனிதே நிறைவுபெறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது