உலகம் அழிவது …?



உலகம் அழிவது …?
ஆங்கிலேயர் காலத்துப்
பிரித்தாழும் சூழ்ச்சி அறிவீரோ
எங்களது இளமைக் காலத்தில்
போர் என்றால் போர் என்று புகன்றது
யார் நலனிற்காய் எனத் தெரிவீரோ?
தேசத்து மானிடர் வீரத்தில் மாண்டதில்
நலம் பெற்றார் யாரென ஓர்வீரோ?
பார் போற்றும் வகையில்
தீவதை ஆசியத்து அதிசயமாய் ஆக்குவதில்
ஆவது யார்க்கு பெருநலமென புரிவீரோ?

தேசம் அழகியதெனில்,
சொர்க்கம் இம்மண்ணில் உளதெனில்,
ஆளுமை யார்க்கும் வாய்த்த தெனில்,
வாழும் யார்க்கும் இது ஓர் நாடெனில்
இன மத குல வேறுபாடின்றிப் பிழைப்பிற்காய்
சட்டம் மீறி நாட்டை விட்டோடும்
குடியானவர் நலனில் உண்டோ எண்ணம்
இறைமை தனை ஏற்றோர் யார்க்கும்!

இறைமை இழந்தோர் இயலுமோ வெல்தல்?
தேர்ந்தால் கரம் சேர்ப்பர் மனிதர்!
‘சர்வ தேசம்’ பொடிபடப் பொடிபட
பேர்த்து எறிகின்ற ஓர் நோக்கில் நின்று
ஆர்த்தெழுந்தால் வேரொடு வீழும்!
அழிவில் ஒருகால் ஆனந்தம் அடைவர்,
நல்லவர் வாழ்வர்; தீயவர் அழியின்!

அழ. பகீரதன
-தாயகம் அண்மைய இதழில் பிரசுரமான கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது